பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/854

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . இரத்னகிரி திருப்புகழ் உரை 381 சிறிதேனும் மதிக்காத (இரக்கமில்லாமல் வரும்) வலியும் செருக்கும் கொண்ட காலன் வருகின்ற நேரத்தில் (வரும் பொழுது) - இந்த ஆபத்து வருகின்றதே என்பதை அறியாமல் ஒடியும் ஆடியும் வருகின்ற சூதாடிகளான ஐவர் (ஐம்புலன் கள் என்போர்), சப்தம், ஸ்பரிசம், மணம், ரூபம், ரசம், எனப்படும் பொய் (யின்பங்களில்) திளைத்து விளையாடி - (அது சம்பந்தமாக). தகுந்த மாதர்களையும் (அவர்கள்) வீடுகளையும் தேடிச் சென்று அம்மாதர்களோடு பல மாய வித்தைகளை விளையாடுகின்ற தொழில் - சீசீ இது என்று பலருக்கும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற (இங்ங்ண்ம் எல்லாம்) என் உடல் தத்தி (தத்துறுதல் உற்று) வருத்தமடைந்து நான் இறந்து படுவேனோ! நீ உனது அழிவில்ாத திருவடியைத் தந்தருளுக. தித்திமித திதிமித ..... டாடமட டூடுடுடு என்று தாளம் திக்குகளில் திரண்டு. (அல்லது மேகம்போல்) ஒலிக்க, அரி (திருமால் களிப்புடன்) ஆட, அயன் (பிரமன் களிப்புடன்) ஆட சிவனும் மகிழ்ந்து களிகூர, தேவி களித்து ஆட வரர் (சிறந்த முநிவர்கள்) களிப்புடன் கூத்தாட, பல திக்குகளிலும் இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, மறை (வேதம்) பாடித் துதிக்க, எதிர்த்து வந்த போர்க்களத்திலே எல்லாத் திசைகளையும், தேடிச் சென்று, எமனார் (எமது துவர்) (போர்க்களத்திற் கிடந்த மாமிசக் கொழுப்பில் (அங்குமிங்கும்) நட்ைசெய, (நிரம்ப உணவு கிடைக்கின்ற தென்று) பலம் மிக உள்ள நரி களித்துக் குதிக்க, பேய் (களித்துக்) கூத்தாட காக்கைகள் (களித்து) ஆட போரில் மோதி வருகின்ற பூதகணங்கள் ஆட, ஒளியை வீசும்படி விடுத்த கூரிய வேலனே!