பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை 217. லோபியரைப்பாடாது இறைவனை நாட தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதான தருவளிவ ராகு மென்று பொருணசையி னாடி * வண்டு தணைவிடுசொல் தூது தண்ட முதலான. சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப தருமுதல தான செஞ்சொல் வகைபாடி மருவுகையு மோதி நொந்து அடிகள் முடியேதெ ரிந்து வரினுமிவர் வீத மெங்க ளிடமாக வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல் மடையரிட மேநடந்து மனம்வேறாய்; உருகிமிக வாக வெந்து கவிதை சொலி யேதி ரிந்து உழல்வதுவு மேத விர்ந்து விடவேநல். உபயபத* மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப முதவியெனை யாள அன்பு தருவாயே! ' குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள் குதிகொளிள வாளை கண்டு ւյաւomésés o வண்டு விடு துாது - வண்டைத் துதாக அனுப்பித் தன் கருத்தைத் தெரிவிக்க வேண்டியவரிடத்திற் சொல்லச் சொல்லும் நூல்வகை அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, பாங்கி (தோழி) குயில், நெஞ்சு, தென்றல், வண்டு - இவை பத்தும் தூதுக்கு உரிய பொருள்களாம். உதாரணம்: கச்சி ஆனந்தருத்ரேசர் வண்டு விடு தூது, தண்டம் - தண்டகம்: தண்டகம் - ஒரு வகை ஆரியச் செய்யுள் - உதாரணம் - சியாமளா தண்டகம்; சிந்து இசைப்பாவகை - உதாரணம் - காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, ஏசல் - ஏசிக் கூறும் பாட்டு வகை (உதாரணம் - அரங்கேசர் ஏசல்) (53 பக்கம் பார்க்க)