உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 53 217 தருவார் இவர் தாம் என்று பொருளாசையினால் ஒருவரை விரும்பித் தேடி, வண்டு விடுதூது, தண்டகம் முதலான இனிமையான கவிமாலைகள், சிந்து, கலித்துறைகள், ஏசல், இன்பமான தரு முதலான செஞ்சொற் (பா) வகைகளை (அவர்மேற்) பாடி - (அடிக்கடி) வந்து போதலையும் சொல்லித் தெரிவித்து, மனம் நொந்து, அவருடை அடி முதல் முடி வரையும் (முழு வரலாற்றையும்) தெரிந்து (புகழ்ந்து) வந்தாலும், (அவர்) அமைதியாக (தம்மிடம் வரும்) எங்களிடத்தில் (எங்களைப் பார்த்து) : (நீங்கள்) "வருவது போதும்" என்று கூறி ஒரு பணம் (தருதற்குக் கூட) அலட்சிய வார்த்தை பேசுவார்கள், (அத்தகைய) மடையரிடம் (நான்) நடந்து மனம் (உடைந்து) வேறுபட்டு - உருகி, மிகவும் வெந் து. (இங்கனம்) பாடல்களைச் சொல்லியே திரிந்து அலைதலானது தவிர்ந்து ஒழியவே, (உனது) நல்ல இரண்டு திருவடிகளிலும் (எனக்கு) ஆசை மேலிட்டு இம்மையிலும் மறுமையி லும் பொருந்தும் இன்பத்தை (நான் பெற) உதவி என்னை ஆள அன்பு தந்தருளுவாயாக குருகு நாரை, அன்றில் எனப்படும் நீர்ப்பறவைகள் இரைகள் தேடி நாடுகின்ற (நீர்நிலை) இடங்களைக் குதிக்கின்ற இள வாளை மீன்கள் கண்டு பயங்கொள்ள - மாலை இரட்டை மணி மாலை மும்மணி மாலை மாலை போல்வன: கலித்துறை - கட்டளைக் கலித்துறை முதலிய தரு இசைப்பாட்டு வகை, சுந்தர விலாசம் முதலிய நூல்களிற் காணலாகும். S குருகு - நாரை அன்றில் (நீர்ப் பறவை வகைகள்)