பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1047

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 世0器盘

தான் கண்ட களுக்களுள் ஒன்ருக அருகதேவர் அமர்ந்

தருளும் அசோக மரம் முறிந்து வீழ்ந்ததனைக் கூறு

கின்ருள்.

தொத்தனி பிண்டி தொலைந்தற வீழ்ந்தது (சீவக-223 ,

என அவள் கூறியது போலவே, மதுரையில் வாழும் சமண முனிவர்கள் தாம் கண்ட தீக்களுக்களைக் கூறுங்கால்

சீர்மலி அசோகு தன்கீழ் இருந்த நந்தேவர்மேலே வேரொடு சாய்ந்துவீழக் கண்டனம்

(பெரிய - சம்பந்த - 637, எனக் கூறியதாக ஆசிரியர் குறித்துள்ளமை அறியத் தக்கதாகும்.

முதலாம் இராசாதி ராசன் சளுக்கியர் மேற் படை யெடுத்துச் சென்று கம்பிலி நகரத்திலிருந்த சளுக்கியர் மாளிகையைத் தகர்த்து அங்கு வெற்றித் தூண் நிறுவிய செய்தியினை, *

கம்பிலிச் சயத் தம்பம் நட்டதும்

இராசபாரம்பரியம் - பா. 28) எனக் கலிங்கத்துப்பரணியாசிரியர் பாராட்டியுள்ளார். இங்ங்ணம் சோழ மன்னர்கள் திசையெங்கும் தம் ஆன நிலவச் சயத்தம்பம் நாட்டிய சிறப்பின

கோல் ஒன்றில் எண் திசை யளவும் ஆணைச் சயத் தம்பம்

நாட்டிய வள வர் (பெரிய - சத்தி - 1)

எனச் சேக்கிழார் உளமுவந்து பாராட்டியுள்ளார்.

இதுகாறும் எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் நாயனர் பண்டைத் தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதலாகத் தம் காலத்திற்குச் சிறிது முன் தோன்றிய நூல்கள் ஈருகவுள்ள சிறந்த தமிழ் நூல்களில் நிரம்பிய தேர்ச்சியுடையார் என்பதும், தெய்வப் புலமை வாய்ந்த அப்பெருந்தகையார் தாம் கற்றுணர்ந்த நூல் நயங்களை வரலாற்றுச் செய்தி களுடன் இயைத்து நோக்கித் திருத்தொண்டர் புராணம் என்னும் இவ்வரலாற்றுக் காப்பியத்தை இயற்றியுள்ளார் என்பதும் நன்கு புலனுதல் காணலாம்.

جمه...بر تیم بببببیب

  • S. I. I., Vol. V, No. 978 ; Vol. VIII, No. 199,