பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 415 வஞ்சனை எண்ணம் கொண்டவனை, (விகடனை) உன்மத்தம் கொண்டவனை, பலவிதமான விகார நடவடிக்கைகள் பூண்டவனை, கோபியை, நிறைந்த மூதேவித்தனம் மூடியுள்ள சனிஸ்வரனை (கலி புருஷனை), ஆண்மையில்லாதவனை, நிலைமாறுபட்ட வாழ்வை உடையவனை வாடி விழுகின்ற குடியனை, நல்ல அறிவு மொழிகளை விரும்பாத மாநுடப்பதரை (கசக்கித் தள்ளப்பட்டவனை), இடிபோன்ற பேச்சுக்களை உடையவனை, LD4%;fT பாதகனாய்க் கதி கெட்டவனை - இத்தகைய கோலத்தவனை) கீழுக்கும் கீழான அடியேனை ஆண்டருளுவது எந்த நாளோ - (ஆன்டருளும் நாள் ஒன்று உண்டோ) மணிமுடிகள் அழகாக உடைய (ஆயிரம் பாரமுடிகளை உடைய) பாதாள லோகனாகிய (ஆதிசேடனும்), பச்சைநிறம் உடல் முழுமையும் உள்ள சர்ப்பராஜனாகிய பதஞ்சலியும் மறுநெறி வழாது ஆட்சி செய்யும் சோழநாட்டாருக்குத் தலைவனான சோழராஜனும், தேவர்களோடு சேர்ந்து வரும் (மகபதி) இந்திரனும் புகழ்கின்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற (சபா) நாயகரும், (அவர் அருகில் நிற்கும்). மடமயில் போன்ற சிவகாம சுந்தரியும் மகிழ்ச்சிகொள்ள வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் மலைமகள் உமைபெற்ற செல்வமே' மனதுக்கு விருப்பம் தருபவனே! அம்பலத்தில் ஆடும். முநிவரின் சொற்படி அந்தர் வேதியிலிருந்து மூவாயிரம் முநிவர்களை நடராஜப் பெருமானது பூஜைக்காகத் தில்லைக்கு அழைத்து வந்தான். தில்ல்ை சேர்ந்து எண்ணிப் பார்க்கையில் ஒரு முதிவரைக் காணாது திகைத்தான். அப்போது அசரீரி அவர்கள் எம்மை ஒப்பவர்கள் யாம் அவர்க்கு ஒப்பு: நாம் அவர்களில் ஒருவன்; எனக் கூறக் கேட்டு யாவரும் மகிழ்ந் து பணிந்தனர். - தேவர்கள் பூமாரி பெய்தனர். (அந்தர் வேதி கங்கைக்கும் யமுனைக்கும் நடுவேயுள்ள தேசம். அந்தர் - நடு, வேதி சமபூமி) கோயிற் புராணம் பார்க்க

  • மநுநீதி கண்ட சோழன், அபயன், அநபாயன் - இவர் தம்முள் எவரையேனும் இது குறிக்கலாம்.