abend
32
absolute coding
abend : இயல்பற்ற முடிவு : இயல்புக்கு மாறான, முடித்தலுக்குரிய குறும்பெயர். சுழி (பூஜ்யம்) யினால் வகுத்தல் அல்லது ஒர் எண்ணோடு ஒர் எழுத்தைக் கூட்டும் முயற்சி காரணமாக ஏற்படும் பிழையால், நிரல் ஒன்றின் செயற் பாட்டை முன்கூட்டியே முடித்தல்.
ABIOS : ஏபயாஸ் : உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்க முறைமைக்குத் துணை செய்யும், உள்ளீட்டு/ வெளியீட்டுப் பணி நிரல் தொகுதிகள். ஐபிஎம், பீ. எஸ்/2 சொந்தக் கணினிகளில் உள் இணைக்கப்பட்டுள்ளது.
abnormal termination : இயல் பற்ற நிறுத்தம் : சுழி (பூஜ்யம்) யத்தால் வகுத்தல், எண் அளவு மீறல் போன்ற பிழையின் விளை வாக ஒரு நிரல் பிரதியிலேயே நிறுத்தப்படுதல்.
abandon : கைவிடு.
abort : கைவிடல் : முறித்தல் : ஒரு முறை பிறழ்ந்த செயல், அல்லது தவறு நிகழும்பொழுது, ஒரு நிரலை முடிவுக்குக் கொண்டு வரும் முறை.
about : பற்றி
abscissa : இடையச்சுத் தொலவு : ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள தொலைவு. ஒரு வரைபடம் புள்ளிவிவர அட்ட வணையின் எக்ஸ் (x) அச்சு ஒய் (y) அச்சுக்கோட்டுக்கு மாறு பட்டதாகும்.
absolute address : நேரடி முகவரி ; தனி முகவரி ; முற்று முகவரி ; துல்லிய முகவரி ; நிரந்தர முகவரி : நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்.
absolute addressing : சரியான முகவரியிடல்.
absolute cell reference : தனிச் சிற்றம் குறித்தல்; நேரடிக் கலம் குறித்தல்.
absolute code : தனிக் குறிமுறை.
absolute coding : நேரடிக் குறியீட்டு முறை ; தனிக் குறி முறை ; முற்றுக் குறிமுறை : எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக