கந்தாலங்காரம் () | 31. பிரார்த்தனை - திருவடியைப் பெற பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக் கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே. (அந்) சிந்து வெந்து.....காவலனே! பொக்கக் குடிலில்.... தந்தருள். (பொ. உ. சிந்து - கடல், வெந்து வெந்து சுவறி, கொக்கு மா மரமாய் நின்ற சூரன் (தறிபட்டு எறிபட்டு) துண்டுபட்டு சிதற எறியப்பட்டு, (உடலினின்றும்) உதிரம் - ரத்தம், குமுகுமு என்று (கக்க) சொரியவும் (கிரி உருவ எழு கிரியிலும் கிரவுஞ்ச கிரியிலும் ஊடுருவவும், (கதிர்வேல் ஒளி வீசும் வேலைத் (தொட்ட) பிரயோகித்த (காவலன்ே) அர்சே (பெர்க்கம்) பொய்யான நிலைத்திராத ( குடிலில்) குடிசையாகிய உடலில் (புகுதா வகை) நான் மீண்டும் புகா வகைக்கு (c) (புண்டரீகத்தினும் செந்தாமரையினும் (செக்கச் சிவந்த அதிகமாக மிகச் சிவந்த (கழல் வீடு) உனது திருவடியாகிய முத்தி இன்பத்தைத் தந்தருளுவாயாக. (சு உ) முருகா! நான் மீண்டும் பிறவாதிருக்க உனது திருவடி நிழலாம் வீட்டைத் தந்தருளுக (கு.உ)'பொக்கம் =பொய்; 'பொக்கங்களேபேசும்"-திருவாசகம்திருவெம்பாவை (5) குடில் _ சிற்றில் "மலஞ்சோரு மொன்பது வாயிற்குடில்" - திருவாசகம் - சிவபுராணம் 54 'பொக்கக் குடில்" = அழிபடுந்தேகம் பின் இரண்டடியிற் சந்த நயத்தைக் காணவும். செக்கச் சிங்த்தல்-மிகச் சிவத்தல் விழியிணை செக்கச் சிவந்து-திருப்புகழ் 137 இனிப் பிறவா வரம்:tட்டிங்கு வந்து வினைப் பிறவிசாராமேகள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே' - திருவாசகம் 1.87 இனி ஒரு காயத்திற் புக்குப் பிற்வாமல் போம் வழி நாடுமின் திருமந்திரம் 206 வேல்ர்ல் - சூர்மா தறிபட்டது. கடல் வெந்தது. கிரி உருவப்பட்டது . து ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களும் வேலைத் ய்ானிக்க ஒழியும் என்பதைக் குறிக்கும். வேலால் சூரன் அழிந்தது போல என் ஆணவம் அழியவும், வேலால் கடல் வற்றினது போல என் கன்ம வசப் பிறவிக் கடல் வற்றவும், வேலால் மாயைக்குன்றம் (கிரவுஞ்சம்) பிளவுபட்டதுபோல என் மாயை ஒழியவும் (என் பெரு டு வேலைச் செலுத்தி) அருள்புரிவாயாக என்பது குறிப்பு
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/38
Appearance