உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை "பெண்ணாசை கொண்ட மனத்தை முருகன் எங்ங்ணம் மாற்றி அடியார்க்கு அருள் புரிவார் என்பதற்குச் சான்று தணிகைப் புராணத்தில் தொழும்பினரை உடையவர்கள் ஆளவ துறுகட னென்னுந் தொல்லை மாற்றம், செழும்பவள இதழ் மடவார் திறத்தழுந்தும் எனதுளத்தைத் திருப்பித் தன் சீர்க், கொழும் புகழின் இனிதழுத்திப் புதுக்கியருள் தணிகை வரைக் குமரன்" என வருமிடத்திற் காண்க. (புராணத்து இறுதிப்பாடல்.) 30. நெஞ்சொடு கிளத்தல் பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமண மேயெங்ங் னேமுத்தி காண்பதுவே. (அந்) மனமே! பாவையர் மொ பாலென்பது; பதம் பஞ்சென்பது, கண் சேலென்பது - ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் - காலென்கிலை,முத்தி எங்ங்னேகாண்பது; (பொ உ) மனமே (பாவையர்) பெண்களின் (மொழி) பேச்சு பால்போல இருக்கின்றது: (பதம்) அடிகள் பஞ்சுபோல (மெத்தென்றிருக்கின்றது (கண்) சேல் மீன்போல விளங்குகின்றது (ஆக)என்று இவ்வாறாக வர்ணித்துத் திரிகின்ற நீ - திருச்செந்தூர் வேலனுடைய திருக்கையில் விளங்கும் வேல் என்று போற்றுகின்றாயில்லை; (கொற்றம்) வீரம் வெற்றி உள்ள (மயூரம்) மயில் என்று துதிக்கின்றாயில்லை; வெட்சிப் க்கள் சூழ்ந்த தண்டையணிந்த (கால்) திருவடிகள் என்று வாழ்த்து ன்றாயில்லை - இப்படி இருந்தால் முத்தி நிலையை எப்படி நான் காண்பது (காண முடியாது என்றவாறு) (சு உ) மனமே! நீ முருகவேளின் வேல், மயில், திருவடி இவைகளைப் போற்றுகின்றாயில்லை; பெண்களின் மொழியையும், அடியையும், கண்ணையும் வர்ணணை செய்து திரிந்து கொண்டிருக்கின்றனை-நான் எப்படிமுத்தி அடைவது? (கு உ) "பாலோ தேனோ-மொழி", "பஞ்சான-சீறடி" "விழிடவேலோ சேலோ" - திருப்புகழ் 826, 26, 328 பஞ்சொக்கும் அடிகள் - கம்ப ராமாயணம் மாரீசன் 70, சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே-புந்திதனை நுழையவிட்டு-அலையாமல் உன் இரு தாள் மட்டிலே மனது செல நினதருளும் அருள்வையோ" தாயுமானவர் மலைவளர்-2