உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 29 இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவனென். Ꮳa க் காட்டொணாதே" - என்னும் அப்பர் ஸ்வாமிகள் திருவாக்கும் 697.10 ஈண்டுணரற் பாலன், ஏகத்து உருவும் அருவும் உருவருவுமாகி - கந்தர் கலிவெண்பா 10 மால் = ஆசை மாலொடு சலாமிடு - திருப்புகழ் 207, அரிது இன்மைப் பொருளில் வந்தது . திருப்புகழ் 1069 கீழ்க்குறிப்பு 29. தன் அனுபவம் கூறினது கடத்திற் குறத்தி பிராணரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித் தடத்திற் றணத்திற் கிட்க்கும்.வெங் காம சமுத்திரமே. (அந்) சித்ரமாதர்-காம சமுத்திரம் கடத்திற் குறத்திதிடத்தில் புனையென யான் கடந்தேன். - (பொ உ) (சித்ரமாதர்) அழகிய பெண்களின் (அல்குல் படத்தில்) பாம்பின் படம் போன்ற அல்குலிலும், கழுத்திலும் செம்மை நிறைந்த வாயிலும், மூங்கில் அனைய தோள்களிலும், (உந்தி) கொப்பூழ் தொப்புள் என்னும் (தடத்தில்) இடத்திலும் (தனத்தில்) கொங்கையிலும் (கிடக்கும்) ஆசைகொண்டு கிடக்கும் (வெம்) கொடிய காமம் என்னும் கடலைக் (கடத்தில்) வள்ளிமலைச் சாரலில் வாசம் செய்திருந்த (குறத்திபிரான்) வள்ளி நாயகனுடைய (அருளால்) திருவருள் என்னும் துணையிருந்த காரணத்தால் (கலங்காத) கலக்கம் கொள்ளாத சலனப்படாத (சித்தத் திடத்தில்) மனோதிடத்தைப் (புணை என) தெப்பமாகக்கொண்டு நான் கடந்து நின்றேன் (தாண்டிக் கரையேறினேன்) (சு உ) வள்ளி கணவன் திருவருளாற் கிடைத்த திடசித்தம் என்னும் தெப்பம் கொண்டு காமத்தை வென்றேன். (கு உ) கடம் = மலைப்பக்கம் புணை = தெப்பம் 'அஞ்செழுத்தின் புணைபிடித்து" - திருவாசகம்: ്ങ 27 燃 செவ்வாய் = செம்மை பழுத்த (முற்றின) வாய், பணை = மூங்கில்: தோள்; பயர். திருப்புகழ்ப் பாடல்களிற் பல இடங்களிலும், கந்தர யில் மங்கையர் மையல் வலைப்பட்டுசல் படும் பரிசென் றொழிவேன்(9) என்றது போன்ற இடங்களிலும், அலங்காரத்தில் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை (32) என்றது போன்ற இட்ங்களிலும் பெண்ணாசையினாற் கொண்ட கலக்க நிலை - கந்தரலங்காரத்துள் இச் செய்யுளினால் தொலைந்து ஒழிந்தது என்பது நன்கு பெறப்படுகின்றது.