பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 முருகவேள் திருமுறை (5 ஆம் திருமுறை திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய வடிவேலா. தினமு முனதுதுதி பரவிய அடியவர் மனது குடியுமிரு பொருளிலு மிலகுவ திமிர மலமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே: அரவணை மிசைதுயில் நரகரிநெடியவர் மருக னெனவெவரு மதிசய முடையவ அமலி விமலிபரை உமையவ ளருளிய முருகோனே. அதல விதல முதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகி னுடனமரு மரகர சிவசிவ பெருமாளே. (1A) 245-2. அருள்பெற தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான தனத்த தனத்த தனத்த தனத்தன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதான நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர நெடிதாடி 'நரகரி நரகாசுரனைக் கொன்றவன்; நரசிம்ம உருவங் கொண்டு இரணியகசிபைக் கொன்ற திருமால் தேகம். நர (மனித உருவம், சிரம் சிங்க உருவம்; நரகாசுரன் அதிதியின் காதணியையும், வருணன் குடையினையும் கவர்ந்தமையால் கண்ணபிரான் இவனைக் கொன்று காதணி முதலியவற்றைக் கொணர்ந்தனர்.