உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருவேங்கடம்) திருப்புகழ் உரை 117 திரிபுரங்களை எரித்த இறையவர் (சிவபிரான்) அளித்த குமரனே! திருப்போரூரிலும், தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரி (பழநி) யிலும், வடமலை (வடவேங்கடமலை) யிலும் உலவுகின்ற கூரிய வேலனே! தினந்தோறும் உனது புகழ்த் துதிகளைக் கூறிப் பரவுகின்ற அடியவர் மனங்களிற் குடி கொண்டும், சத்திசிவம் என்ற இரண்டு பொருள்களிலும் (அல்லது பெரிய பொருளாம் பிரணவத்திலும், அல்லது கல்விப் பொருள், செல்வப் பொருள் இரண்டிலும்) விளங்குபவனே! இருண்ட (ஆணவ) மலம் நீங்க (ஞான) சூரியன் என்னும்படி வருகின்ற பெருவாழ்வே! ஆதிசேடன் என்னும் பாம்பணையின்மேல் துயில் கொள்ளும் நரகரி (நரகாசுரனைப் பகைத்துக் கொன்றவர்), நெடியவ்ர் (திருவிக்ரம ரூபங் கொண்டவர் ) ஆகிய திருமாலின் மருகன் எனக் கூறும்படி வந்துள்ள அதிசய மூர்த்தியே! (அற்புதங் கொண்ட மூர்த்தியே) அமலி, விமலி (மல மற்றவள்), பரை, உமையவள் அருளிய முருகோனே (குழந்தையே): அதலம், விதலம் முதலான ஏழு உலகுகளும் கிடு கிடு என்று நடுங்க வருகின்ற மயிலில் இனிதாக ஒளிர்கின்ற (பெருமாளே)! ஆறெழுத்து மந்திரத்தில் மத்தியிலே அழகுடன் பொருந்தியுள்ள ஹரஹர சிவசிவ பெருமாளே! (கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே!) 245-2 தேன் நெய் பொருந்தியுள்ள பிச்சி மலரின் குளிர்ச்சியைக் கொண்டதாய், கச்சிதமாய் (ஒழுங்காய்)க் கட்டப்பட்டதாய், கருமணலை ஒத்ததாய், சுருள் உற்றும், நறுமணம் உற்றும், இருளைத் (தனது கரு நிறத்தால்) வெருட்டி ஒட்டியுள்ளதும், வரிசையாய் அமைக்கப்பட்ட ώΥ ΙΠΤΑΡΚΤΟώύΤ மலர்கள் செருகப்பட்டுள்ள, நறுமணத்தில் நிரம்ப உறைகின்ற வண்டுகள் நெடுநேரம் மொய்த்துத் திளைக்கவும்,