பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 295 317 கள்ளத்தனம் (வஞ்சனை, பொய்) இவைகளின் நிறைவு கொண்ட ஒரு பை, ஒட்டைகளை உடைய மாமிசப் பை, துள்ளுகின்ற இக்கன் (கரும்பு வில்லைக் கொண்ட, மன்மதனுடைய சேட்டைகளினால் உண்டாகும் தளர்வு, கோபம் (அல்லது மிக்க கோபம்), களவு இவைகளுக்கு இருப்பிடமாம் தோல் பை, விரைந்து செல்லும் தசவாயுக்கள் கொண்ட (காற்றடைத்த) பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு என அமைந்த செத்தையாம் பை, பசு (சீவான்மா), பாசம் (பந்தம், தளை) இவைகளுக்கு இடமாம் * சேற்றுப்பை (இவை நெருங்கும் பை), ஆசை மயக்கத்துக்கு இடமாம் பை, தவறுகளுக்கு குற்றங்களுக்கு) இருப்பிடமாம் பை, சி (சீழ்) சேருகின்ற பை, கலப்பிலாத (மிக்க) அசா (தளர்ச்சி) (இவற்றோடு கூடியதாய்), இறைச்சி, ஈரல் (உடம்பிலுள்ள உறுப்பு). (இவற்றை) அள்ளி உண்ண வேண்டி நாய்கள் சள்ளிட்டு (குலைத்தும்), இழுத்தும் பற்களில் கொள்ளுகின்ற இந்த யாக்கையை (உடலை) ஒழிக்க மாட்டேனா! தெளிவு (அறிவு நிறைந்த அத்தி (யானை - தேவசேனை. யின்) தலைவனே! வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், திருப்பாற் கடலிற் (பள்ளி கொள்ளும்) திருமாலுக்கும் மருமகனே! சிள் வண்டுகள் நிறைந்த காட்டில் உள்ள கிராதர் (மலை வேடர்கள்) கொல்கின்ற பறவைகளுள்ள கடிய காட்டு வழியில் (வள்ளியின் பொருட்டு) வந்தவனே!