பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் #24

வெந்து நீருகும்படி செய்தார். இவ்வாறு தாயார்க்கு ஈமக்கடனை முடித்த அடிகள், திருவெண்காட்டீசரைப் பணிந்து திருவிடைமருது ரையடைந்து மருதப்பிரான வழிபட்டிருந்தார். ஒரு நாள் நீர் வேட்கையால் வருந்திய பொழுது இடைமருதீசனே தண்ணிர் கொணர்ந்து தரப் பருகி மகிழ்ந்தார். பின்பு திருவாரூர் முதலிய தலங்களை வணங்கிப் பல அற்புதங்களை நிகழ்த்தித் திருவெண்காட் டில் தங்கியிருந்தார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்த ஞரை அரசன் சிறைப்படுத்தின செய்தியை அவர் புதல் வன் சொல்லக் கேள்வியுற்ற அடிகள், ! மத்தளை தயிருண் டானும் ' என்ற பாடலைப் பாடினர். அப்பொழுதே சிவ கணங்கள் சேந்தனுரைச் சிறையினின்றும் மீட்டு அடிகள் திருமுன்னர் க் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனரும் அடிகளைப் பணிந்து பிறவிச் சிறையிலிருந்து உய்தற்குரிய நெறிமுறைகளை உணர்ந்து மகிழ்ந்தார். பின்பு திருவெண் காட்டடிகள் சீகாழிப்பதியையடைந்து தோணியப்பரைப் பாடிப் போற்றினர். தில்லைக் குச் சென்று பொன்னம் ல வாணனையிறைஞ்சிக் கோயில் நான்மணிமாலை பாடினர். அங்கு அடிகள் பசியால் வருந்தியபோது சிவகாமி யம்மையே உணவளித்துப் பசிதீர்த்தருளினர். பின்பு பல தலங்களைப் பரவிப் போற்றிக் காஞ்சியையடைந்தது திரு வேகம்பவான ரைத் தரிசித்துத் திருவேகம்பர் திருவந் தாதி பாடினர். திருவொற்றியூரையடைந்து ஒருபா ஒருபது என்னும் பிரபந்தத்தைப் பாடி இறைவனைப் போற்றி மகிழ்ந்தார்.

இவ்வாறு திருவெண்காட்டடிகள் திருவொற்றியூரில் தங்கியிருக்கும் நாட்களில் ஒரு நாள் கடற்கரையை யடைந்து அங்கு விளையாடும் சிறுவர்களுடன் தாமும் விளையாடுவார் போன்று திடீரென ஒரு மணற் குன்றில் தோன்றி மறைந்து வேருெரு பக்கம் வெளிப்பட்டார். அதனைக் கண்டு அதிசயித்த சிறுவர்களை யழைத்துத் தம்மை மணலால் மூடச்செய்து வெளிவருவதும் மறைவது மாக விளையாட்டுக் காட்டி, முடிவில் வெளிப்படாது மறைந் தனர். அடிகளைக் காணுது சிறுவர்கள் மணலைத் தோண் டிப் பார்த்தபொழுது அடிகள் சிவலிங்கமாக வெளிப்பட் டனர் ' எனப் பட்டினத்துப் பிள்ளையார் புராணம் கூறும்.

46