உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 30?

ஆய்பவர் தோழியாகவும், இளமந்தி தலைவனுகவும். பந்தாடுதல் தலைமகளது வருத்தம் பாராது தான் வேண்டிய வாறு ஒழுகும் அவனது ஒழுக்கமாகவும் உரைப்பினும் அமையும் " எனப் பேராசிரியர் இத் திருக்கோவையின் உள்ளுறைப் பொருளை இனிது விளக்கியுள்ளார். இது,

கான மஞ்ஞை யறையீன் மூட்டை வெயிலாடு முசுவின் குருளையுருட்டும் குன்றநாடன் கேண்மை யென்றும் நன்று மன் வாழிதோழி யுண்கண் நீரோ டொராங்குத் தணப்ப உள்ள தாற்றல் வல்லுவோர்க்கே (குறுந்தொகை - 38) எனவரும் கபிலரது பாடலின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்க தாகும்.

தலைவியின் மெலிவினைத் தனித்தற் பொருட்டு வெறி யாடல் நிகழ்த்த வேலனை அழைத்து வருமாறு தாயர் கூறக் கேட்ட தலைமகள். எனது மெலிவு தீர்தல்வேண்டி நிகழ்த்தப் பெறும் இவ்வெறியாடலால் எனது உடல் மெலிவு நீங்கா தாயின் என்னைக் குறித்து இவ்வூரவர் கூறும் அலர்மொழி உறுதியாகி விடும் , முருகனை வழிபட்டு நிகழ்த்தப்பெறும் இவ் வெறியாடலால் என் உடல்மெலிவு ஒருகால் நீங்கி விடுமாயின் அதனைக் கேள்வியுற்ற என் காதலர் இவளுக்கு இம்மெலிவு எனது பிரிவு காரணமாக உளதாயிற்றன்று போலும் என எண்ணுதற்கு இடனுகி விடும். ஆகவே இவ்வெறியாடலால் எனது உடல் மெலிவு தீர்ந்தாலும் தீராவிட்டாலும் இருவகையாலும் எனக்கு உயிர்வாழும் நெறியில்லை எனத் தன்னுள்ளே கூறி வருந்துவதாக அமைந்தது.

அயர்ந்தும் வெறிமறி யா வி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்து மொழியா விடினென்ன பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்து முனரான தம்பல முன் ன லரிற் றுயர்ந்தும் பிறிதி ைெழியினென் குதும்

துறைவனுக்கே. (287) எனவரும் திருக்கோவையாகும். இத்திருப்பாடல்,

" பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்

செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன்