பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798

பன்னிரு திருமுறை வரலாறு


காத்த பெருமான் என எல்லாராலும் போற்றப்பெறும் பெருஞ் சிறப்பு எய்தினர்.

தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழார் பெருமான், தில்லை நகரிலேயே தங்கியிருந்து தேவார ஆசிரியர் மூவ ராலும் போற்றப் பெற்ற அடியார்களது திருத்தொண்டின் பெருமைகளை இடைவிடாது உணர்ந்து போற்றிச் சிவனடி யார்களோடு தவநிலையிலமர்ந்து தில் லைச்சிற்றம்பலப் பெருமானது தூக்கிய திருவடிநீழலையடைந்து இன்புற்ருர்,

இவ்வரலாற்றினை விரித்துக் கூறுவதே சேக்கிழார் புராணமாகும். சிந்தாமணியைச் சோழன் படித்துப் பொழுது போக்கியதைக் காணப்பொருத சேக்கிழார், அதனைச் சமணர் கட்டிய பொய்க்கதையெனக் கூறி மறுத்து அதற்கு மாருகப் பெரிய புராணத்தைப் பாடினர் என இந்நூல் கூறியிருப்பதற்குப் பெரிய புராணத்தில் ஆதரவில்லையென்றும், கொடும்பாளுரையாண்ட சிற்றரச ராகிய இடங்கழியாரை முடிமன்னர், அறுவருள் ஒருவரென வும் பல்லவர் குலத்துத் தோன்றிய பெருவேந்தராகிய ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர் என்னும் இருவேந் தர்களையும் குறுநில மன்னரெனவும் இந்நூல் கூறுங் கூற்று பெரிய புராணத்திற்கு மாறுபட்டதென்றும், அப்பர் சம்பந்தர் காரைக்காலம்மையார் இம்மூவரும் இயலிசைத் தமிழ் வல்லோரெனவும், நாளைப்போவார், ஆணுயர், நீல கண்ட யாழ்ப்பானர் இம்மூவரும் இசைத் தமிழ் வல்லோ ரென வும் ஐயடிகள் திருமூலர் சேரமான் பெருமாள் இம் மூவரும் இயற்றமிழ் வல்லோரெனவும் வகுத்துக் கூறிய இந்நூலாசிரியர், சுந்தரரை இப்பிரிவுகளிற் சொல்லாமல் விட்டதும் நந்தனுரை இசைத்தமிழ் வல்லோர் என ஆதர வின் றிச் சேர்த்துக் கூறியிருப்பதும் தவறென்றும் ஆகவே திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் இந்நூல், உமாபதி சிவாசாரியாராற் பாடப்பட்டதன் றென்றும், மிகுந்த சைவப்பற்றும் சமண சமய வெறுப்புங்கொண்ட ஒருவரால் உமாபதி சிவாசாரியர் காலத்திற்கு முன்பே பாடப்பட்டதென்றும் கூறுவாருமுளர்."

1. டாக்டர் மா. இராசமாணிக்களுர் M.C.L எழுதிய பெரிய புளான ஆராய்ச்சி பக்கம் 11-15,