பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரமேரூர்) திருப்புகழ் உரை 161 720. நீண்ட மேகம்போல இருண்ட, கூந்தலை உடைய மாதர்க்ளின் மேல் அன்புவைத்து நட்புவைத்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாகி. பூமியில் பொருள் தேடுவதற்காக ஒடி, இளைத்து, உள்ளம் சோர்ந்து, நீதியான சிவவாழ்வை - மங்களகரமான வாழ்க்கையை நினையாமல். பாழுக்கே உணவாயிற்று என்று சொல்லும்படியாகப், பேர்களை வைத்து ஒரு கோடிக் கணக்கான பாடல்களை அமையும்படியாக இயற்றுகின்ற மோசக்கார பாவியாகிய நான் எங்ங்னம் வாழ்வேன்! உனது அன்பர்களுக்கு என்று நீ வைத்துள்ள பார்வையைக் (கிருபாகட்ாrத்தை) கொஞ்சம் திருவருள் வைத்து (எனக்கும்) பாலிக்க மாட்டாயோ! கடலிலே பள்ளி கொண்டுள்ள திருமாலும், சிறந்த மலராம் தாமரையில் வீற்றிருக்கும் பிரமாவும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராம் சிவபிரானும் பிறர் யாவரும், ஆனை மத்தகம் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத் திருநூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில் வீற்றிருந்து அற்புதமாக அழகிய சித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலில் ஏறி. பகைவன் எனச் சண்டை செய்ய வந்த சூரன் துரளாகச் சண்டை செய்த வேலனே! மான்மகள் வள்ளிக்கு உரியவனால் விளங்கி இருப்பவனாகிய பெருமாளே! (பார்வைசற் றருளோடு பணியாயோ) 721. மாதர்களுடைய கொங்கையிலும், விரிந்த அழகிய மார்பில் விளங்குந் தன்மையை உடைய முத்துமாலையிலும், நறுமணம் உள்ள் மெல்லிய கூந்தலிலும், சேல்மீன் போன்ற கண்ணாகிய வேலிலும்.