பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உள ர க. கரு (இஸ்). புறப்பாட்டுவண்ணமாவது முடிந்தது போன்று முடியாதாகிவரும் என்றவாறு. உ-ம் 'நிலவுமண லகன்துறை வலவ னேவலின் எரிமணிப் புள்ளின மொய்ப்ப நெருநலும் வந்தன்று கொண்கன் தேரே இன்றும் வருகுவ தாயின் சென்று சென்று தோன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு தண்பொழில் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அல்கலும் படர்மலி உள்ளமொடு மடல்மா வேறி உறுதுயர் உலகுட னறியநம் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே” (யாப். வி. ப.க.அரு) என வரும். (உகr) (இ-ஸ்) புறப்பாட்டு வண்ணமென்பது, இறுதியடிப் புறத்ததாகவுந் தான் முடிந்தது போல நிற்றல். (எ-று). 'இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புதம்.363) என்புழி ஈற்றயலடி முன்னிய வினையே’ யென முடிந்தது போன்று முடியாதாயிற்று.8 (உ.உரு) 1. செய்யுள்முடிந்த நிலையிலும் அதனாற் சொல்லக்கருதிய பொருள் செய்யுளின் புறத்தேயும் விரிந்துநிற்பது போன்று அமைந்த ஒசைத்திறம் புறப் பாட்டு வண்ணமாகும். புறப்படுதல்-கூற எடுத்துக்கொண்டபொருள் கூறி முடித்த நிலையிலும் செய்யுள் முடியாததுபோன்று முடிந்துதிற்கும் ஒசைத்திறம். 2. இறுதியடியிலுள்ள அடி பாட்டு முடித்ததுபோன்ற ஒசையினாததல். 3. செய்ந்நீ முன்னிய வினையே! என வரும் ஈற்றயலடி செய்யுள் முடிந்தது. போன்று காட்டினும் அதன் முடிபாகிய ஓசைத்திறம் முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே" என அதன்புறத்தே இறுதியடியில் அமைந்து கிடத்தலின் இது புறப்பாட்டு வண்ணமாயிற்று.