பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த 'கல்விகரை கண்ட புலவோனே. கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று கல்லலற வொன்றை யருள்வோனே; வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த மயில்வீரா. வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே. (8) 321. திருவடியை உணர தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதான குடிவாழ்க்கை யன்னை மணையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள். குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை யுணராதே; 'கல்வி கரைகண்ட வரலாறு: ஒரு காலத்தில் கலைப்புலவர்களும், தேவர்களும், முநிவர்களும் கூடியிருந்த சபையில் யார் முதன்மைப் புலமை உடையார், அவருக்கு வித்வ தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி நிகழ்ந்தது; கலைமகளின் அம்சமான ஒளவையாரே இத்தாம்பூலத்துக்கு உரியவர் என்று தீர்மானித்து அந்த அம்மையாரிடம் யாவரும் சென்று நிகழ்ந்ததைக் கூற, ஒளவையார் இதைப் பெறத் தக்கவள் நான் அன்று; புலவர்கள் எனப்படும் தேவர்களுக்கு அதிபன் ஐந்திர வியாகரணம் என்னும் அருமையான இலக்கண நூலை இயற்றினவன் இந்திரன், அவனிடம் செல்லுங்கள், என்றனர்; அங்ங்ணமே, இந்திரனிடம் அவர்கள் போய்க் கூற இந்திரன் மிக அஞ்சி அந்தோ ஒரு இலக்கண நூல் இயற்றி ஒருவன் சகல கலா வல்லவன் ஆய்விடுவான்ா! முருகவேளிடம் தமிழ் கற்ற அகத்திய முநிவரே இத் தாம்பூலத்தை வாங்குவதற்கு உரியவர்" என்றான். இதைக் கேட்டு யாவரும் அகத்தியரிடம் செல்ல, அவர் சகல கலா வல்லி', 'கலைமகள்' என்றே பெயர் கொண்ட சரசுவதி தான் இத் தாம்பூலத்தை வாங்கும் தகுதி உடையாள்" என, யாவரும் கலைமகளிடம் சென்று வந்த செய்தியைக் கூற, கலைமகள் யான்