பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 305 மலை மங்கையாம் பார்வதி வரையில் சென்ற கல்விப் (போட்டியில்) கரை கண்ட (தலையிடம் பெற்ற) சகல கலா வல்லவனாய் விளங்கிய புலவனே! தேன் ஒழுகும் கொன்றையை அணிந்த வள்ளலாம் சிவபிரான் வ்ண்ங்கி நிற்க அன்று குழப்பமறு (ஐயம் அற) ஒப்பற்ற பிரணவப் பொருளை 蠶 தருளினவ்னே! வன்மை வாய்ந்த அசுரர்கள் அஞ்ச, நல்ல தேவர்கள் மேம்பட்டு விளங்க, உன து சாமர்த்தியத்தைத் (திறலைக்) காட்டிய மயில் வீரனே! வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளிமலைக்குப் போய் வள்ளி நாயகியை மணந்த பெருமாளே! = (துள்ளிய கடம்பு தரவேணும்) 321 இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாய், மனையாள், பிள்ளை, குயில் போலப் பேசி எதிர்ப்படும் மொழியார் (பெண்கள்) குலம், கிடைத்துள்ள நல்ல செல்வம். இவையெலாம் நமக்கு உள்ளன என்று (ஆணவம் கொண்டு) குருவின் உபதேச மொழிகளை உணர்ந்த்றியாமல் கற்றது கைம் மண்ணளவு கல்லா துலகளவு வாகிசுரி, ராஜ ராஜேசுரி எனப்படும் பார்வதிதேவியே இப்பரிசுக்கு ஏற்றவள், என்று கூற, யாவரும் தேவியிடம் போய் விண்ணப்பித்தனர். தேவி புன்னகை புரிந்து நான் வாழைப்பழத்தின் தோல் போன்றவள் எனக்குள் இருந்த கனி, முத்து, முத்துக்குமரனே இப்பரிசுக்கு உரியவன் எனக் கூறி விடுத்தனள். பின் யாவரும் கந்தபுரம் சென்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறி ஏற்றுக்கொள்ள வேண்டும் என முருகவேளிடம் தாம்பூலத்தை நீட்ட "நன்று, நாம் ஏற்றுக் கொள்வோம்" எனத் தடையின்றிக் கூறி அந்தப் பரிசை அவர் ஏற்றுக்கொண்டார். இங்கனம் சகல கலா வல்லவன் நான் என்று மார் தட்டும் பெருமாள் ஆயினர் நமது முருகவேள். மலைமங்கை வரைக்கும் போய் அந்த அம்மையார் கல்விகரை கண்டவன் எம்புதல்வனே எனக் குறித்தபடியால் "கல்லசல மங்கை எல்லையில் விரிந்த கல்விகரை கண்ட புலவன்" ஆயினர் கந்தவேள். இதன் விரிவை சுப்பிரமணிய பராக்ரமம்' என்னும் புத்தகத்திற் சகலகலா வல்லப மூர்த்தி சரித்திரத்தைப் பார்க்க