பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

பன்னிரு திருமுறை வரலாறு


முறையில் அமைந்தமையால், இது நீத்தல் விண்ணப்பம் என்னும் பெயர்த்தாயிற்று. இதன் முதல் இருபது பாடல் களிலும் நாற்பத்தெட்டாம் பாடலிலும் உத்தரகோச மங்கைக்கு அரசே ' என இறைவனை அடிகள் அழைத்துப்

போற்றுதலைக் கூர்ந்துநோக்குங்கால் நீத்தல் விண்ணப்ப மாகிய திகம் திருவுத்தரகோசமங்கையில் அருளிச்

தென்பது இனிது புலளும். நீண்ணப்பத்திற்குப் பிரபஞ்ச வைராக்கியம்' - ஞ்ேர் கருத்துரை வரைந்துள்ளனர். பிரபஞ்ச வைராக்கியம்’ என்னும் இத்தொடர்க்கு 'உலக வாழ்க்கையிற் பற்றறுத்தலாகிய உறுதிப்பாடு' என்பது பொருள். திருப் பெருந்துறையில் இறைவன் அந்தணனுகி வந்து அழகமர் திருவுருக்காட்டி ஆண்டருளிய பின்னர், உலகத்தொடர்பினை அறவே உதறிவிட்டு இறைவளுேடு பிரிவறக்கலத்தலாகிய பேரின்ப நிலையினைத் தலைப்பட்டு இன்புறமுந்தும் அடிகளார். இறைவன் இன்னும் சின்னுள் இங்கு இருத்தி' எனக் கூறி மறைந்தனளுக, அப்பிரிவினைத் தினத்தனைப்பொழுதும் தரித்திருக்க வொண்ணுராய், உலக வாழ்க்கையில் தமக்குள்ள வெறுப்பும், முதல்வன் திருவடியினைத் தலைப்படுதற்குரிய பேரன்பினைப்பெறுதல் வேண்டுமென்னும் பெருவேட்கையும் விளங்க அருளிய பனுவல் நீத்தல் விண்ணப்பம் ஆதலின் இதற்குப் பிரபஞ்ச வைராக்கியம் என முன்னுேர் கருத் துரை வரைந்தனர். ஆண்டவனது திருவடியைத் தலைப்படு தற்குச் சாதனமாகிய மெய்யன் பினது வியக்கத்தக்க திறத் தினை விளக்கும் திருச்சதகத்தினையடுத்து அதன் பயனுக உலக வாழ்க்கையிற் பற்ருெழிவின் உறுதிப்பாட்டினைப் புலப் படுத்தும் நீத்தல் விண்ணப்பம் அமைந்திருத்தல் கூர்ந்து உணரததககதாகும.

யாவர்க்குங் கடையேனுகவுள்ள எளியேனை நினது பெருங்கருணைத் திறத்தால் உளங்கலந்து நின்று ஆண்டு கொண்டருளிய ஏறுார்ந்த செல்வனே, என்னை இத்துயர் நிலையிற் கைவிட்டு விடுவாயோ? வளமிக்க புலியின் தோலை உடையாகக் கொண்டவனே, நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கையைத் தலைநகராகக் கொண்டு வீற்றிருந்தருளும் வேந்தனே, செஞ்சடைக் கடவுளே, அடியேன் பெரிதுத் தளர்வுற்றேன்; எம்பெருமானே, தளர்ச்சி நீக்கி அடியேனத் தாங்கிக் காத்தருளவாயாக என்பார்,