பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் #3%

கடையவ னேனைக் கருணையினுற் கலந் தாண்டுகொண்ட விடையவனேவிட் டிடுதிகண்டாய் விறல்வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவனே தளர்ந் தேனெம்பி ரானென்னைத் தாங்கிக்

கொள்ள்ே.

எனத் திருவாதவூரடிகள் உத்தரகோசமங்கைப் பெருமானைப் பரிந்து வேண்டுகின்ருர், இதன்கண் விட்டிடுதி ' என்னும் இகரவீற்று முன்னிலை யொருமை எதிர்கால வினைச்சொல் கண்டாய் என்னும் முன்னிலையசையினைப்பெற்று விட்டு விடுவாயோ என ஒலி வேற்றுமையால் விவைாக நின்

રુ اثر بع شیمیایی مشابه இ! விட்டு விடாதே என்ற பொருளைத் தந்தது. இச்சொற்கு இதுவே பொருள் என்பதனை, விடுதிகொல் என்னயென்று நீத்தல் விண்ணப்பமென்னுந் தொடைகெழு பனுவல் ஒத' எனவரும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுளில் கடவுள் மாமுனிவர் தெளிவாகக் குறித்துள்ளமை காண்க.

நீத்தல் விண்ணப்பம் என்ற தொடர்க்கு, உலகப்பற்றை நீத்தற் பொருட்டு இறைவனிடத்து வேண்டிய வேண்டு கோள் எனவும், என்னை நீத்து விடாதே என இறைவனை நோக்கிச் செய்துகொண்ட வேண்டுகோள் எனவும் இரு வகையாக நம் முன்னுேர் பொருள் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்நுட்பம்,

மித்தையுலகினை யகற்றி, விடாமல் எனே ஆண்டருளென் றத்தர் அறிந்திட நீத்தல் விண்ணப்பம் அறைந்ததுவசம் எனவரும் திருவாசக உண்மையால் புலளுதல் காணலாம். இத்தொடர், மித்தை உலகினை அகற்றி என ஆண்டருள்

  • - or *... ? - - + or , எனவும், விடாமல் என ஆண்டருள் ' எனவும் இயைந்து இப்பனுவலில் அமைந்த இருவகை விண்ணப்பங்களையும் ஒருங்கு சுட்டிநிற்றல் அறியத்தக்கதாகும்.

எ. திருவெம்பாவை

திருவாதவூரடிகள் திருவண்ணுமலையினை யடைந்து இறைவனை வழிபட்டு அத்தலத்தில் தங்கியிருக்கும் நிலையில் மார்கழித் திங்கள் வந்ததாக, இளமகளிர் வைகறைப் பொழு தில் துயிலிணர்ந்தெழுந்து ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாகிய இறைவனது பொருள்' புகழினைப் போற்றிசைத்துத் தம்மையொத்த மகளிரைத் துயி