பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 375 செந்தினைப் புனமிருந்த அழகிய மலைநில ஊராம் வள்ளிமலையில் வாழ்ந்த இளங்கொடி போன்ற வள்ளி நாயகியின் பாதங்களில் வந்து வணங்கி நின்று அவளது திருமுக தரிசனத்தைப் பெற்ற தாள் அழகனே (அல்லது அவள் எதிரில் தோன்றின) திருவடி அழகனே! அங்கையில் வேலாயுதத்துடன் பூமியில் (தில்லையில்) செம்பொன் அம்பலத்தில் உள்ளே பிராகாரங்களோடு (ச) கூடிய (மந்திரமீது) (அல்லது, மேல் பிராகாரத்தில் உள்ள) திருக்கோயிலிலே அமர்ந்தருளும் தம்பிரானே! (சீர்பதம்பெறு விஞ்சைதாராய்) 598. (உலகிலே) தோன்றித் தோன்றி, (வித்து) விந்துவில் (சுக்கிலத்தில் ஊறி ஊறி (கருவில் தோன்றித் தோன்றி பிறந்து பிறந்து) என்னுடைய உடலானது வெந்துபோய், வ்ெந்துபோய், இங்னம் ஒடுவதால் வாடி, உயிரும் (பலபிறப்பு எடுப்பேன் என்று) சபதம் செய்து கொண்டது போல (அல்லது வஞ்சினங்களில் - கோபத்தின் காரணத்தால்) காடு கொண்ட (மிகவும் கணக்கிலாதனவான) உருவங்களை எடுத்து அழிந்து அழிந்துபோன என்னை உனது திருவுள்ளம் மகிழ்ச்சியுடனே (ஏன்று) ஆட்கொண்டருளுமாறு நீ எழுந்தருளி (உனது பின்னிமுகம் என்னும் யானைமீது ஏறி. அண்டர்களும் (தேவர்களும்) அடியார்களும் சூழ்ந்து வர என்னுடைய மாயையிற்பட்ட (பிறவிக்காடு) ஒழிந்து தொலைந்துபோக, (சந்தர்) இசையைப் பாடினவராய் (அண்டு) நெருங்கிவந்த இசைத் தேவரம்பையர்) இசைகள் வல்ல அல்லது புகழ்கொன்ட தேவ ரம்பையர் (தேவமகளிர்) உள்ளம் (பக்தியால்) கனிவுற்றுப் பந்தடித்து நடனத்துடன் கூடிவர, வண்டுகள் விரும்பி மொய்க்கும்.