பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சுந்தர சண்முகனார்


என்றார் தாயுமானவர் (பராபரக்கண்ணி)

“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (85)

என்றருளினார் திருமூலர்.

“தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்” (399)

என்றறிவித்தார் வள்ளுவனார்.

ஆக, இவ்வாறெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ள உயிர் அன்பு (ஆன்மநேயம்) ஏட்டளவில் இருந்தால் போதுமா? இப்போது, ஒரே உலகக் கொள்கையாகிய உலக ஒருமைப்பாடு பேசப்படுகிறது. இந்தக் கொள்கை வெற்றி பெறின், உயிர் அன்பு ஒருமைப்பாடு வெற்றி பெற்றதாகப் பொருள் கொள்ளலாம். கடவுள் நெறி அதாவது சமயநெறி வற்புறுத்துவதும் இந்த உயிரன்பு ஒருமைப்பாடே யாகும். 

4. காட்சிக்கு எளிமை


உலகில் செல்வர்கள் சிலர் செய்யும் ஆரவார - ஆடம்பரங்களைக் கண்டு, போதிய செல்வம் இல்லாதவரும் அந்தப் பாதையில் சென்று பின்னர் இடர்ப்படுகின்றனர். தம்மைப் பார்த்து உள்ளம் நாணும் ஏழைகட்காகவாவது செல்வர்கள் எளிமையாய் இருப்பது நல்லது.

செல்வர் சிலர், வாழ்க்கை நடைமுறையில் எளிமையாய் இல்லாவிடினும், தம்மை அணுகும் மக்களிடமாவது எளிமையாய்ப் பழகினால், அவர்கட்கு ஒரு வகையில் உள்ளம் நிறைவடையும்.

மேட்டுக் குடியினர், பிறர்க்கு எந்தப் பெரிய உதவியும் செய்யாவிடினும், வந்து காண்பவர்க்கு எளியவராய், விலை