சுந்தர சண்முகனார்
27
மனித இனத்திற்கே பொதுவாக இருக்க வேண்டியதான ஒழுக்கம் மட்டும் குறையலாகாது. அங்ஙனம் குறைந்தால், உயர்ந்தவனாகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கின்ற அவனது பிறவியும் பயனற்றதுதான் - இழிந்தது தான்.
அதுமட்டுமா? பொறாமைக் குணம் உடையவன் பிறருடைய உடைமை, புகழ் முதலியவற்றைக் கண்டு கண்டு, நெஞ்சம் புழுங்கிப் புழுங்கிச் சாவா னாதலாலும், அவன் ஒன்றும் செய்ய முடியா தாதலாலும், பிறரது உடைமையை யோ - புகழையோ பொறாமையால் கெடுக்க முயன்ற போது பிறரால் தாக்கப்படுவா னாதலாலும் அவனிடத்தில் எத்தகைய நல்வளர்ச்சியும் இருக்க முடியாது; அதுபோலவே, ஒழுக்கமில்லாதவனும் மக்களிடையே எத்தகைய உயர்வையும் அடைய முடியாது. அவனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசு பழியே யாகும்.
ஒழுக்கக் கேட்டால் உலகில் பல தீங்குகள் நேருவதை அறிந்திருப்பதால், அறிஞர்கள் நல்லொழுக்கத்தினின்றும் தவறவே மாட்டார்கள். இழுக்கத்தால் பல துன்பங்கள் நேரும் என்பதையும், அதனால் ஒழுக்கமுடையவராய் வாழ வேண்டும் என்பதையும் அறிந்து ஒழுகுபவரே அறிஞர்.
ஒழுக்கமுடையோரே உயர்வடைவர்; ஒழுக்க மில்லாதவர், பிற குற்றவாளிகள் அடைய முடியாத பழியையும் அடைவார்கள். அப்படியென்றால் ஒழுக்கமின்மை எவ்வளவு கொடிய குற்றம் என்பது பெறப்படு மன்றோ? மேலும், தாங்களே அடைய வேண்டாத பழியையும் அடை வார்கள். அஃதாவது, ஒரு குற்றத்தைப் பிறர் செய்தாலும், அதனை ஒழுக்கமில்லாத இவரே செய்திருக்கக் கூடுமென்று உலகத்தார் கருதி, ஒழுக்கமில்லாத இவரையே பழிப்பர்.
பயன் தரும் நல்ல பயிரை விளைத்துப் பயனுற்று வாழ விரும்புபவர்கள் முதலில் நல்ல விதையை விதைக்கின்றார்