பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்ாம் நூற்றாண்டு 561 உயிர் பெற்ற தமிழர் பாட்டு ஆ - பாரதியார். வெ - திருலோக சீதாராம். எஸ்.என். பிரின்டர்ஸ், திருச்சி. 5-12-1954. வெளியிட்டவரிடம் ஒரு பகுதியே கிடைத்திருந்ததாம். பின்னர்ச் செல்லம்மா பாரதியிட மிருந்த துண்டு வெளியீடுகளில் பல பாடல்கள் இருக்கக் கிடைத் தனவாம். பாடல்கள் பல பொருள்கள் பற்றியவை. பல்லவி யாக - கீர்த்தனமாகப் பாடல்கள் உள்ளன. பாரதி பாடல்கள் தொகுப்பு: ஜீவா. ஜனசக்தி பிரசுராலய வெளியீடு சென்னை. ஜனசக்தி பிரஸ்-சென்னை. செப்டம்பர் 11,1955. உள்ளுறை: தமிழும் தமிழகமும், பாரத நாடு, தேசீயக் கொடி, பாரத சமுதாயம், வாழ்த்து முதலிய 14 தலைப்புகள் உள் ளன. சில உள் தலைப்புகளும் உண்டு. - - பாரதியார் கவிதைகள்- தேசிய கீதங்கள் வெளியீடு: கன்னித் தமிழ்ப் பதிப்பகம், மதுரை. விற்பனை உரிமை : பாரதி புத்தக நிலையம், மதுரை. அச்சு: வீ.சுப்பு ராயலு நாயுடு பிரஸ், மதுரை. முதல் பதிப்பு-1955. உள்ளுறை : 1. பாரத நாடு, 2. தமிழ் நாடு, 3. சுதந்திரம் 4. தேசீய இயக்கப் பாடல்கள், 5. தேசியத் தலைவர்கள் 6. பிற நாடுகள்-இவை பெரிய தலைப்புகள், 'வந்தே மாதரம் முதல் கரும்புத் தோட்டத்திலே என்பது வரை 53 உள் தலைப்புகள் உள்ளன. - பராதியார் கவிதைகள் 'குயில்’ மதுரைப் பாரதி புத்தக நிலைய வெளியீடு. தமிழ்நாடு பிரஸ், மதுரை. காலம்: 11, 9-1955, குயில் பற்றியது இது. உள்ளுறை: 1. குயில், 2. குயிலின் பாட்டு, 3. குயிலின் காதல் கதை, 4. காதலோ காதல், 5, குயிலும் குரங்கும், 6. இருளும் ஒளியும், 7. குயிலும் மாடும், 8. நான்காம்நாள், 9. குயில் தனது பழம் பிறப்புக் கதையுரைத்தல், ஆகிய