பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 717 நாடிகள் வெண்பா, சிற்றம்பல நாடிகள் தாலாட்டு, சிற்றம் பல நாடிகள் அநுபூதி விளக்கம், சிற்றம்பல நாடிகள் வரு காலத் திரங்கல், சிற்றம்பல நாடிகள் நிகழ் காலத் திரங்கல், சிற்றம்பல நாடிகள் கழிகாலத் திரங்கல், சிற்றம்பல நாடிகள் திருப்புன் முறுவல் - ஆகியவை. மெய்கண்ட சாத்திரத் திரட்டு வெ - திருவாவடுதுறை ஆதீனம் - சுப ஆவணி 1934 விநாயக சதுர்த்தி மலர். முருகன் அச்சுக்கூடம், குடந்தை. நூல் கள்-போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சு விடு தூது: உண்மை நெறி விளக்கம் ஆகியன. பழைய உரையும் உண்டு. கொடை மன்னர் பனுவல் - ஆ - வித்துவான் பெ. கோவிந்தன், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு. அப்பர் அச்சகம், சென்னை. 1954. வள்ளல்க்ள் எழுவரின் வரலாறு பாடல்களாக இயற்றப் பட்டுள்ள தொகுப்பு - இலக்கண நூல் திரட்டு: பஞ்ச லட்சண மூலமும் நேமி நாதமும் வீரசோழியமும் தொ - அ. இராமசுவாமி. வெ-சரசுவதி மகால், தஞ்சை. விசய-ஆணி. சீவ ரட்சாமிர்த அச்சுக் கூடம், சென்னை. நூல்கள். நன்னூல், அகப் பொருள் விளக்கம், புறப்பொருள், வெண்பா மாலை, யாப்பருங்கலக் காரிகை, தண்டி யலங்காரம், நேமி நாதம், விர சோழியம் - இவற்றின் மூலங்கள் (நூற் பாக்கள்) தரப்பட்டுளன. பண்டார சாத்திரம் திருவாவடு துறை ஆதின வெளியீடு. நமச்சிவாய மூர்த்தி அச்சகம், திருவாவடுதுறை. இப்பெயரில் நான்கு வெளியீடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கையும் ஆண்டு வாரியாகக் காண்பாம். உரையும் உண்டு. - 1. விசாரி புரட்டாசி. 11-10-1959, நூல்கள்: அம்பலவாண தேசிகர் தசகாரியம், தட்சண மூர்த்தி தேசிகர் தசகாரியம், சுவாமி நாத தேசிகர் தச காரியம்.