பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் - 453 "ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், மதுரகவி யாழ்வார், எதிராச ராம் இவர்கள் - வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள்தம்மின் வாசியையும் இந்தஉல கோர்க்குரைப்போம் யாம்' - என்பன பாடல்கள். மாறன்=நம்மாழ்வார். சேரலர் கோன்= குலசேகர ஆழ்வார். பட்டர் நாதன்=பெரியாழ்வார். அன்பர் தாள் தூளி=தொண்டர் அடிப் பொடியாழ்வார். கலியன்=திரு மங்கை யாழ்வார். இந்நூலிலும், ஆழ்வார். பன்னிருவருடன் எதிராசர் இணைத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது பற்றி அறிஞர்கள் ஆய்க. பதின்மர் செந்தமிழ்: ஆழ்வார்கள் பன்னிருவர் என்று கூறுவது ஒருபுறம் இருக்க, ஆழ்வார்கள் பதின்மர் (பத்துப் பேர்) என்று சொல்லும் ஒரு கொள்கையும் உள்ளது. இதற்குச் சான்றாகத் திருவேங்கடக் கலம்பகம்’ என்னும் நூலிலுள்ள பின்வரும் பாடலைக் கூற லாம்: - *. "பதின்மர் செந்தமிழைப் படிக்கிலாய் கேளாய் படித்தபேர் தாளையும் பணியாய், எதிபதி சரனே சரணமென் றொருகால் இசைக்கிலாய், எமதுவே ங் கடத்தைத் துதி செயாய், இருந்த இடத் திருந்தேனும் தொழுகிலாய், வாழி என் மனனே! மதிநுதல் அலர்மேல் மங்கை நாயகனார் மலர்ப்பதம் கிடைப்பது எவ்விதமே? என்பது பாடல். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்குப் பதின் மர் செந்தமிழ்’ என்னும் பெயர் இப்பாடலில் தரப்பட்டுள்ள தாகத் தோன்றுகிறது. பன்னிருவருள் எந்த இருவரை நீக்கிப் பதின்மர் என்று கூறப்பட்டிருக்கலாம் என நுணுகி நோக்குங்கால், ஆண்டாள், மதுரகவி யாழ்வார் என்னும் இருவரை நீக்கி யிருக்கலாம் என உய்த்துணரலாம். இதற்கு ஒருசார் அகச்சான்று வருமாறு: