உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

99



சிங்கி; பல ஊர்த் தண்ணீர் குடித்தால் பத்தெட்டும் தெரியும்' என்னும் பழமொழி உனக்குத் தெரியாதா சிங்கா? சரி! நீ இங்கே என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா?

சிங்கன் குற்றாலநாதரை வேண்டிக் கொண்டேன்; அவர் கூட்டி வைத்தாரடி சிங்கி.

சிங்கி அப்படியென்றால் அவரைக் குறித்து ஆடுவோமே -பள்ளு பாடுவோமே சிங்கா!

சிங்கன்:. ஆடுவது யார்? பாடுவது யார் சிங்கி?

சிங்கி:- நீ இறைவனைப் பற்றி இசையாகப் பாடு. நான் அதற்கேற்ப ஆடுகிறேன் சிங்கா.

சிங்கன் :- நீ ஆடுவதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்காதடி சிங்கி.

சிங்கி:- ஏன் சிங்கா? எனக்கு உடம்பு நோகும் என்றா?

சிங்கன் :- இல்லை இல்லை: ஆட ஆட உன்மேல் ஆவல் பிறந்துவிடுமடி சிங்கி.

சிங்கி:- சே! சே! கடவுளைக் குறித்து நீ பாட அதற் கேற்ப நான் ஆடும் போது என்னைக் கடவுளாகவே எண்ண வேண்டும். பொருளறிந்து ஆட்ட பாட்டங்களைச் சுவைக்க வேண்டும். ஆடுபவரையும் பாடுபவரையும் பார்த்துச் சுவைக்கக் கூடாது. தெரிகிறதா? ஊம், பாடு. நான் ஆடுகிறேன்.

கணிர் கணிர் என்று சிங்கன் பாடினான். கலீர் கலீரென்று சிங்கி ஆடினாள். இருவரும் இறைவனின் இணையற்ற பேரின்பத்தில் மூழ்கித் தம்மை மறந்து திளைத்தார்கள்.

வசந்த வல்லியும் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் சிற்றின்பம் என்னும் கடலில், காதல் என்னும் அந்தக் கரையை அடைந்ததாக அமைந்துள்ள இக்குறவஞ்சி நாடகம்