இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
மனத்தின் தோற்றம்
குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்:
- “இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
- எங்கே நடந்தாய் நீ சிங்கி
- எங்கே நடந்தாய் நீ சிங்கி”
சிங்கி சொல்லுகின்றாள்:
- “கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
- குறிசொல்லப் போனேனடா சிங்கா
- குறிசொல்லப் போனேனடா சிங்கா”
சிங்கன். அப்படியா! அது இருக்கட்டும். உன்
- “காலுக்கு மேலே பெரிய விரியன்
- கடித்துக் கிடப்பானேன் சிங்கி
- கடித்துக் கிடப்பானேன் சிங்கி”
சிங்கி; இது விரியன் பாம்பல்ல
- “சேலத்து காட்டிற் குறிசொல்லிப் பெற்ற
- சிலம்பு கிடக்குதடா சிங்கா
- சிலம்பு கிடக்குதடா சிங்கா”
பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி
- “மெல்லிய பூங்தொடை வாழைக்குருத்தை
- விரித்து மடித்ததார் சிங்கி
- விரித்து மடித்ததார் சிங்கி”
இங்கி; இது வாழைக் குருத்தல்ல—
- “நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
- நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா
- நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா”
சிங்கன்:- ஒகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக் கொண்டாயடி?