உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

77


கழுத்து; அயக்கிரீவன் என்றால் குதிரைக் கழுத்து உடையவன் என்பது பொருளாம்; திருமாலின் அயக்கிரீவத் தோற்றத்தில் ஒரு புராணக் கதை அடங்கியுள்ளது. அயக்கிரீவன் கோயில் முகப்பில் இருக்கும் மண்டபத்தின் மேல் உள்ள விமானம் காணத்தக்கது. மலை மேலும் ஒரு கிணறு உண்டு.

அயக்கிரீவன் கோயில் உள்ள மலைக்கு ஒளி ஷத கிரி என்னும் பெயர் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் = மருந்து; கிரி = மலை; ஒளஷதகிரி = மருந்து மலை. இந்த மலையில் மருத்துவ மூலிகைகள் பல உள்ளன; இந்த மலைக் காற்றும் மலையடிவாரத் தண்ணிரும் நோய் தீர்க்கும் மருந்துகளாம்; அதனால் இம்மலை மருத்துவமலை என அழைக்கப்படுகிறது.

“முன்னொரு காலம் விண்வழியே உலாச் சென்ற திருமால் மருத்துவ மலையில் தங்கி இளைப்பாறினார். அப்போது அவர்க்குத் தாகவிடாய் தோன்ற, ஆதிசேடனும் கருடனும் நீர்கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் மலையின்கீழ்த் தரையை வாலால் அடித்துப் பிளந்து கிணறு உண்டாக்கி நீர் கொணர்ந்து தந்தார். அந்தக் கிணற்றுக்குச் சேஷ தீர்த்தம் என்பது பெயர். கருடன் தன் அலகால் தரையைக் கிழித்து நீர் ஆறாகப் பெருகச் செய்து அதிலிருந்து நீர் கொணர்ந்தார்; அந்த ஆற்றிற்குக் ‘கருட தீர்த்தம்’ அல்லது 'கருட நதி' என்பது பெயர்: அதுதான் கெடிலம் ஆறு-இது புராணங்களை ஒட்டிய கதை.

ஆதிசேடன் வாலால் அடித்துத் தோன்றியதாகச் சொல்லப்படும் சேஷதிர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திர புரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்த கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணிரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு