118
மனத்தின் தோற்றம்
தான் வேண்டு + ஆ எனப் பிரித்து ஏதாவது பொருத்தமான புணர்ச்சி விதி கூறலாம். வேண்டாம் என்றால், வேண்டு+ஆ + ஆம் எனப் பிரிக்க வேண்டும். இங்கே ஆம்' என்பதை என்ன என்று சொல்வது - என்ற குழப்பம் நேரும். ஆம் என்பது தன்மைப் பன்மை வினைமுற்று விகுதியாகும். இங்கே அது பொருந்தாது.
ஆனால், உலகநீதி என்னும் நூலில், உலகநாதபண்டிதர்,
- “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
- ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்...”
என நூல் முழுவதிலும் வேண்டாம் என்பதையே போட்டு வெளுத்துக் கட்டிவிட்டார். ஆனால், யான், இதுவரையும் வேண்டா என்று எழுதி வருகிறேன். மொழியியலார் சிலர் வேண்டாம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு இலக்கண அமைதி என்ன?
- “வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” (339)
என்பது நன்னூல் பா. இவை ஐந்து பால்களுக்கும் மூன்று இடங்கட்கும் வரும் என்பது இதன் கருத்து. வேண்டும், தகும், படும் என்னும் சொற்களையும் இவ்வாறே கொள்ள லாம் என உரையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவற் றுடன் வேண்டாம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அல்ல
அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல, தான் அல்லேன் - நாங்கள் அல்லேம், நீ அல்லை - நீங்கள் அல்லீர் என்று எழுத வேண்டும் என்பது விதி. ஆனால் மக்கள், அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல, அவை அல்ல, நான் அல்ல, நீ அல்ல - என்றே பெரும்பாலும் எழுதுகின்றனர். அதனால், அல்ல என்பதையும் வேறு, இல்லை, உண்டு முதலியன