உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மனத்தின் தோற்றம்


“ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந்து
ஆவினை ஊட்டல் போல்” (16-15)

என்னும் பாடல் பகுதியால் மாட்டு மருத்துவமும் அறிவிக்கப் பட்டுள்ளது.

10.2 கணி (சோதிடம்)

மாயை என்னும் கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் என்னும் அணிகலனைப் புனைந்தாளாம் ஒரு தோழி. பாடல்:

“கன்னி அத்தம் வந்து இனமணிக் கற்கடகத்தின்
மன்னி உற்றது அற்புதம் என வளைபல காக்க
வின்னுதல் கருங்கண் மடமாது கை விளங்கப்
பொன்னின் கற்கடகம் புனைந்தனள் ஒரு பூவை” (4-13)

என்பது பாடல்: மேடம், இடபம், மிதுனம், கடகம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், என்னும் பன்னிரண்டு இராசிகளுள், இருபத்தேழு விண் மீன்களுள் (நட்சத்திரங்களுள்) ஒன்றான அத்தம் (அஸ்தம்) என்னும் விண்மீன் கன்னி இராசிக்கு உரியது. அது, (கற்) கடக இராசியில் வந்து உற்றது அற்புதம் என்று சொல்லும் படி, கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் அணிந்தது இருந்ததாம். கணிப்பாடல் இன்னும் உண்டு.

10.3 தருக்கம்

தருக்கம் என்பதைத் தமிழில் நெறிமுறை எனலாம். தி மேல் நோக்கிச் செல்லும் - நீர் கீழ் நோக்கிச் செல்லும் என்பது தருக்க - நெறி முறை.

திருப்பருப்பத மலை உச்சியிலிருந்து அருவி கீழ் நோக்கி ஓடி வருகிறது. ஒரு யானை அருவி நீரை உறிஞ்சி மேல் நோக்கி விண்ணிலே செல்லும்படி உந்தி எறிகிறதாம். வெப்ப