உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மனத்தின் தோற்றம்



என்னும் ஞானசம்பந்தரின் திருக்கோலக்காப் பதிகப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. பொய்கை = குளம் (இந்தக் காட்சியைத் திருக்கோலக்காவில் 1941 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை யான் (சு. ச)நேரில் கண்டுள்ளேன். மற்றும், பத்தாம் நாள் இரவில் நீராட வேண்டும் என ஆரிய மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளதாம். அதற்கும் தமிழரின் பழக்க வழக்கத்திற்கும் தொடர்பில்லை. ஒற்றைப் படையாம் நாளில் நீராடல் தமிழர் வழக்கம்.

ஊடலில் காலில் விழல்

மனைவி ஊடல் கொள்ளின், ஊடலைத் தீர்க்க அவள் காலில் கணவன் விழுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குமி என்பவள் ஊடல் கொள்ள, அவளுடைய காமவயப்பட்ட கணவனாகிய இராகுலன் என்பான் அவள் காலில் விழுந்து வணங்கினானாம். (இது முற்பிறப்புச் செய்தி).

“இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம் பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி” (10:20-23)

என்பது பாடல் பகுதி. இது நடக்குமோ நடக்காதோ - இவ்வாறு எழுதுதல் ஓர் இலக்கிய மரபாய் விட்டது. சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை நூலில் ஒரு பெரிய அடிவணக்கம் கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது:-

சிவன் உமையின் ஊடலைத் தணிக்க உமையின் காலில் விழுந்தாராம். அவரது முடியில் பிறை நிலவு, பாம்பு, கங்காதேவி உண்டு. உமையின் நெற்றிப் பகையாகிய பிறை நிலவும், அல்குல் பகையாகிய பாம்பும் தன் காலில் படும்படி விழுந்ததற்கு மகிழாமல், சககளத்தி (ஒத்த மனைவி) யாகிய