பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பூர்ணசந்திரோதயம்-3 எழுதிக் கொடுத்திருக்கிறாள் என்று ஜெமீந்தார் நினைத்தவராய், “சரி; இந்த எழுத்து எனக்கு நன்றாகத் தெரியும். இது ஹேமாபாயியினுடைய எழுத்துதான் என்று கூறியவராய் அந்தக் கடிதத்தை எல்லோருக்கும் கேட்கும் படி படித்துக் காட்டினார். அதுகடிதம் போல எழுதப்படாமல் ஓர் அத்தாட்சி போல எழுதப்பட்டிருந்தது. புதன்கிழமை மாலையில் ஹேமாபாயி, பூர்ணசந்திரோதயத்துக்கும் பாளையக் காரருக்கும் வம்புலாம் சோலையில் நட்புச்செய்து வைத்த தாகவும், அதன் பிறகு வெள்ளிக்கிழமை இரவில் தனது வீட்டிற்கே பூர்ணசந்திரோதயம் வந்து ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணிவரையில் பாளையக்காரரோடு தனிமையில் இருந்ததாகவும் அந்த அத்தாட்சிப் பத்திரத்தில் எழுதப்பட்டு இருந்ததை ஜெமீந்தார் படித்து முடித்தார். அப்போது பாளையக்காரரது உற்சாகமும் மனவேதனையும் உச்சநிலைமை அடைந்திருந்தன. ஆனாலும், தமது சூழ்ச்சி முற்றிலும் பலித்துவிட்டதாகவே அவர் உறுதியாக எண்ணிக் கொண்டார். எதனால் என்றால், சாமளராவ் முதலிய மற்ற எவரும் வாய்திறவாமல் ஸ்தம்பித்து மெளனியாக இருந்ததைக் காண தமது கட்டுக்கதையை அவர்கள் உண்மை என்று நம்பிவிட்டதாகவே அவர் எண்ணிக்கொண்டார். ஆனால், ஜெமீந்தாரும் இளவரசரும் விவரிக்க வொண்ணாத வியப்போடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பாளையக்காரர் சொல்வது முழுப்புரட்டு என்பதை ருஜூப் பிக்கத் தகுந்த முக்கியமான சில ரகசியம் தங்களிடம் இருந்தா லும், தாங்கள் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாதவர்களாய் அவர்கள் இருவரும் சிறிது நேரம் தவிக்கலாயினர். அப்போது கலியாணபுரம் மிட்டாதார் இனாம்தாரினது காதில், "என்ன விநோதம் பார்த்தீர்களா? அந்த அயோக்கியன் பஞ்சண்ணாராவ் நம் மிருவரிடத்திலும் உண்மையைச்