பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - எஸ். நவராஜ் செல்லையா

பேபிக்கும் ஜீன்சீலி என்பவளுக்கும்தான் கடும்போட்டி. இருவரும் 5 அடி 5 அங்குலம் உயரத்தைத் தாண்டும் முயற் சியில் ஈடுபட்டிருந்தார்கள். இருவரும் அதனைத் தாண்டி முடித்துவிட்டார்கள். அதுவே உயரத் தாண்டலில் உலக சாதனையாகக் கருதப்பட்டது. அடுத்து, கால் அங்குலம் உயரமாக குறுக்குக்கம்பம் உயர்த்தப்பட்டது. பேபி தாண்டி முடித்து விட்டு வரும்பொழுது, அதிகாரி ஒருவர் குறுக் கிட்டார். அதாவது, பேபி தாண்டுகின்ற முறை, தாண்டும் விதிக்குப் புறம்பானது என்பதாகும்.

அதாவது, அவள் ஒரு காலை ஊன்றித் தாண்டாமல், இரண்டு கால்களையும் ஊன்றித் தாவிக் (Dive) குதித்தாள் என்பதுதான் அதிகாரியின் குற்றச்சாட்டு. அதுபோல், தான் தாண்டவில்லை என்று பேபி பலமுறை முறையிட்டும் அவள் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தாண்டி முடித்து உலக சாதனை நிகழ்த்திய போதும், ஜீன்சீலிதான் முதலாவது என்று அறிவிக்கப் பட்டாள். பேபி இரண் டாவது இடத்தையே பெறலாயிற்று.

இவ்வாறு இரண்டாவது இடத்தைப் பெற்று, இரண் டாவது முறையாகத் தோற்ருலும், பேபி டிடிரிக்சன் பெற்றி ருந்த திறமையும் ஆற்றலும், வேறெந்த வீராங்கனையும் பெற்றதே கிடையாது என்பதற்கு எத்தனையோ வீர நிகழ்ச்சி களே நடத்திக் காட்டியிருக்கிருள்.

1982ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் மேற்கூறிய உலகசாதனைகளை நடத்திக் காட்டியிருந்த பேபி, அந்த போட்டிகளின்போது, பேபி நடந்து கொண்ட விதமே மற்றவர்களை பிரமிக்க வைத்ததுடன், அதிசயப் படவும் செய்தது.

தடைதாண்டும் போட்டி நடைபெறுகின்ற நாளுக்கு முதல்நாள், வீராங்கனைகள் தங்கியிருந்த அறைகள் பக்கம் சென்ற பேபி, ஒரு அறையின் கதவைத் தட்டினள். பலர் அங்கேயிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப்