பக்கம்:சிலம்பின் கதை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதவி

199



உரிமைகள் அதற்காக எழுப்பப்படும் வினாக்கள் உறவுகளை முறித்து விடுகின்றன. கவர்ச்சியால் அவன் ஒன்றுபட்டவன்; அவள் அன்பை அவனால் உணர முடியாமல் போகிறது.

பிரிந்து சென்று விடுகிறான்; அவன்பால் உள்ள நேசத்தால் அவள் முடங்கல் எழுதி அனுப்புகிறாள்; அவன் தனக்குத் தேவை என்பதைத் துணிந்து தெரிவிக்கிறாள். அவனை மகிழ்விக்க அல்ல; தான் மகிழ்வு கொள்ள அவனை அழைக்கிறாள். இது அவன் இயல்புக்கு மாறுபட்ட நிலை. அவள் உணர்வை அவன் மதிக்கவில்லை.

அந்த அன்பை அவனால் விளங்கிக் கொள்ள இயல வில்லை. பிறகு அவள் தனிமைத் துயரில் வாடியதும், அதனால் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கியதும் அறிந்த பிறகு தான் அவள் அன்பின் ஆழத்தை அறிகிறான். அவள் பாசத்தையும் நேசத்தையும் அறிகிறான். அவளுடைய மறுபக்கம் அவனுக்கு விளங்குகிறது. அவள் புறத் தோற்றத்தில் மயங்கியவன் இப்பொழுதுதான் அவள் மன இயல்பை அறிகிறான். அவள் தீதிலள்; தான் தீது உடையவன் என்று அறிவிக்கிறான்.

அவளுக்குத் தான் இழைத்த சிறுமைகளை உணர் கிறான். இதுவரை அவன் கண்ணகிக்குத்தான் தீங்கு இழைத்ததாகக் கருதி வந்தான். கோசிகன் கொண்டு வந்த கடிதம் படித்ததும் மாதவியின் அக அழகை அவனால் அறிய முடிகிறது. அவளையும் தான் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டதை அறிகிறான்.

அந்த முடங்கலில் அவன் பிரிவால் தான் அடைந்த தனிமையைப் பற்றியோ, துயரத்தைப் பற்றியோ கூறாமல் தன்னால் கண்ணகிக்கு நேர்ந்த கடுமையைப் பற்றியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/200&oldid=936521" இலிருந்து மீள்விக்கப்பட்டது