188 (4) பஞ்சாயத்தானது (2)-வது உட்பிரிவின்படி கொடுக் கப்பட்ட லேசென்ஸில் கண்ட நிபந்தனைகளே மீறி நடந்தால், எந்த நேரத்திலும் அதை நிறுத்தி வைக்கலாம்; அல்லது ரத்து செய்யலாம். (5) இந்தப் பிரிவின் கீழ் பஞ்சாயத்தானது லேசென்ஸ் வழங்குவதற்கும் அல்லது புதுப்பிப்பதற்கும் ஒவ்வொரு தடவை யும் 200 ரூபாய்க்கு மேற்படாத கட்டணத்தை வசூலிக்கலாம். 108. ஆடு, மாடு அடிக்கும் பொது தொட்டிகள் பஞ்சாயத்தானது ஆடு மாடுகளே அடிப்பதற்கு பொது தொட்டிகளே ஏற்படுத்தி, அவற்றை உபயோகிப்பதற்காக, வாடகையும் கட்டணமும் விதிக்கலாம். 109. பிராணிகளே கொல்வதற்காக உபயோகப் படுத்தும் இடங்களையும் அந்தத் தொழில் புரிவோர்களுக்கு லைசென்ஸ் வழங்குவதையும் தடைசெய்தல் அல்லது ஒழுங்கு படுத்துதல் கீழ்க்கண்டவற்றிற்காக விதிகள் இயற்றுவதற்கு அர சாங்கத்துக்கு அதிகாரம் உண்டு (a) விதிகளில் நிர்ணயித்துள்ள, விதிவிலக்கு அற்ற எல்லா நேரங்களிலும் பிராணிகளே, பொதுத் தொட்டிகளைத் தவிர வேறு இடங்களில் வெட்டுவதையோ அல்லது தோல் உரிப்பதையோ தடை செய்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்; (b) பொது மக்களுக்கு விற்பனே செய்வதற்காக, விதி களில் கூறியுள்ள பிரகாரம் பிராணிகளேக் கொல்லும் நபர் களுக்கு லேசென்ஸ் வழங்குதல். (c) தொட்டிகளையும் அ ங் கு ள் ள இறைச்சியையும் சோதனை செய்யவும்; அப்படி சோதனே செய்யும் அதிகாரி களுக்கு ஊதியம் கொடுத்தல். 110. கட்டிடங்களுக்கு இலக்கமிடுதல் (1) இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லாப் பகுதி களிலும், இது சம்பந்தமாக நியமிக்கப்படும் அதிகாரி, கட்டி டங்களின் வெளிக் கதவு அல்லது பக்கக் கதவு அல்லது நுழைவாயிலின் அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இலக்கமிடுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/379
Appearance