84. குறிப்பு:~செய்து கொடுக்கும் வசதிகள் பிரயாணிகள், வாகனங்கள், பிராணிகள் தங்கும் கொட்டகையாகவும், குடி தண்ணிர் வசதிகள் முதலியவைகளாகவும் இருக்கலாம். 6. வண்டி அல்லது பிராணி குறித்து பஞ்சாயத்துச் சட்டத்தின் 106-வது பிரிவின் (a) பகுதியோடு இவ்விதி களைச் சேர்த்து வாசிக்கையில் ஏற்படும் அதிகாரங்களேக் கொண்டு விதிக்கப்படும் கட்டணம், கோரிக்கை அனுப்பி யும் செலுத்தப்படவில்லேயெனில் மேற்படி வரியை வசூலிக் கும் அதிகாரம் பெற்ற நபர், தம் கருத்துப்படி, சேர வேண் டிய தொகைக்கு ஈடு செய்யும் வகையில் மேற்படி வண்டி யின் பகுதி அல்லது சரக்கின் ஒரு புகுதியை அல்லது பிராணி யைக் கைப்பற்றி நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்; உடை மைப் பொருள்கள் அல்லது சரக்குகள் இல்லேயென்ருலும் சேர வேண்டிய தொகைக்கு ஈடு செய்யப் போதுமான மதிப் புள்ள பொருள் இல்லேயென்றலும் மேற்படி வண்டியை அல்லது பிராணியைக் கைப்பற்றி நிறுத்திக்கொள்ளலாம். 7. 6-வது விதியின்படி கைப்பற்றிய சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றிய இருபத்து நான்கு மணி நேரத் துக்குள் நிர்வாக அதிகாரிக்கோ அல்லது அவர் மேற்படி சொத்தை வரப்பெற்று விற்பதற்கான அதிகாரம் கொடுத் துள்ள நபருக்கோ அனுப்பி வைக்க வேண்டும். நிர்வாக அதிகாரி மேற்படி சொத்தைக் கைப்பற்றிய உடனேயே சொந்தக்காரருக்கு அல்லது சொந்தக்காரர் மேற்படி கிராமத் தில் அல்லது நகரத்தில் வசிப்பவராக இல்லேயெனில் சொத் தைக் கைப்பற்றிய சமயத்தில் சொத்துக்குப் பொறுப்பா யிருந்த நபருக்கு அறிவிப்பு கொடுத்து அல்லது மேற்படி நபர் எவரேனும் காணப்படவில்லேயென்றல் தண்டோரா அடிக்கச் செய்து விளம்பரப்படுத்த வேண்டும். மேற்படி அறிவிப்பு சார்பு செய்த தேதியிலிருந்து அல்லது விளம் பரப்படுத்திய தேதியிலிருந்து இரண்டு நாட்கள் முடிந்த பிறகு மேற்படி சொத்து அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட இடத்தில் பொது ஏலத்தில் விற்கப்படும். 8. மேற்சொல்லியபடி விற்பனையாவதற்கு முன்பு ஏதா வதொரு சமயத்தில் சேர வேண்டிய தொகையுடன் கைப் பற்றப்பட்டு வந்ததற்கான இருபத்தைந்து காசுகளையும் சேர்த்து நிர்வாக அதிகாரியிடம்ோ அல்லது அவரது அதி காரம் பெற்ற நபரிடமோ செலுத்திவிட்டால், கைப்பற்றிய சொத்து உடனேயே கொடுக்கப்பட்டு விடவேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/571
Appearance