68
வட்டாரத்திலுள்ள டவுன்ஷிப் கமிட்டியைச் சேர்ந்த தற். போதைய சேர்மன்களும் அங்கத்தினர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த ஏற்பாடு.
மற்றபடி, பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்கள் ஆவதற்கு பஞ்சாயத்துச் சட்டத் தில் இடமில்லை. -
3. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலில் உத்தியோக காரணமான அங்கத்தினர்கள் இருப்பார்களா ? அம்மாதிரி அங்கத்தினர்கள் யாரும் இருக்க மாட் டார்கள்.
4. பஞ்சாயத்து யூனியன் வட்டாரத்தில் வசிக்கும் சட்டசபை அங்கத்தினர்கள், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதன் பிரதிநிதித்துவமாக, பதவி காரணமான அங்கத்தினர்களாக இருப் பார்களா ?
அவர்கள் பதவி காரணமான அங்கத்தினர்களாக இருக்க முடியாது. ஆனால், ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி யைச் சேர்ந்த சட்ட சபை அங்கத்தினரும், மேல் சபை அங்கத் தினரும், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம்.
5. சட்ட சபை அங்கத்தினர்கள், மேல் சபை அங்கத்தினர்களுக்கு ஒட் அளிக்கும் உரிமை உண்டா ? அவர்களுக்கு ஒட் அளிக்கும் உரிமை கிடையாது.
6. மேற்படி M.L.A., M.I.C.கள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தேர்தலில் நிற்கலாமா ? அவர்கள் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவ ராகவோ அல்லது துணைத் தலைவராகவோ தேர்ந்தெடுப் பதற்கு, பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 12-(2) பிரகாரம் உரிமை இல்லை.
7. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினரு
டைய பதவிக் காலம் எவ்வளவு ? பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 19 (1) பிரகாரம், ஐந்து ஆண்டுகள் பதவி வகிக்கலாம்.