உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ் நாடும் மொழியும்


2. வஞ்சித் திணை - பகைவரது நாட்டைக் கொள்ள எண்ணி போர்புரியச் செல்லுதல்.
3. உழிஞைத் திணை - பகைவரது மதிலை வளைந்து நின்று பொருதல். மதில் காத்தலும் இதன்கண் அடங்கப்பெறும்.
4. தும்பைத் திணை-பகைவருடன் கலந்து பொருதல்.
5. வாகைத் திணை- வெற்றி கொள்வது.
6. காஞ்சித் திணை-வீட்டின் காரணமாய் செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறுதல்.
7. பாடாண்டிணை - தலைவனது வீரம், கொடை, முதலியவற்றைப் புகழ்ந்து கூறுதல்.

இத் திணைப் பெயர்களிற் பல பூக்களின் பெயராய் இருப்பதால், போர்க் காலத்தில் அவ்வப்பொழுது அறிகுறியாக வேறு வேறு மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வர் எனத் தெரியவருகிறது. மேலும் ஒரு அரசன் மற்றொரு அரசன் மேல் படையெடுப்பதற்கு முன்னர் தனது கருத்தை நிரைகவர்தல் (Cattle lifting) மூலம் தெரிவிப்பான் என்பதும், போருக்குச் செல்வதற்கு முன்னர் நாளும், புள்ளும் பிறவுமாகிய நிமித்தம் பார்த்தனர் என்பதும், வீரத்தோடு கருணையும் உடையவர்களாய் தமிழ் வீரர் விளங்கினர் என்பதும், பகைவரது நாட்டில் 'எரி பரந்தெடுத்தல்' (தீக் கொளுத்தல்) நடந்தது என்பதும், நகரத்தைச் சுற்றிலும் மிக்க உரனுடையதும் பொறிகள் பொருத்தப் பெற்றதுமாகிய ‘முழுமுதலரணம்' இருந்தது என்பதும், அதனைச் சுற்றிலும் முதலைகள் வாழும் பெரிய அகழி இருந்தது என்பதும், யானைப்படை, குதிரைப்படை தமிழ்நாட்டில் இருந்தன என்பதும், போரில் மாண்டவர்களைத் தெய்வமாக வணங்கினர் என்பதும், கொள்ளை கொண்ட பொருள் அனைவர்க்கும் பகிர்ந்து