உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

25



“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”

பார்ப்பான், தனக்குரிய தொழிலாகிய ஒதுதல் - ஒதுவித்தலை மறந்தாலும் மறக்கலாம்; நல்லொழுக்கத்தை மட்டும் மறந்து கைவிடலாகாது. ஏனெனில், ஒதுதலை விட்டால் மீண்டும் ஒதிக்கொள்ளலாம். அது குறித்து அவனை அவ்வளவாக இகழ மாட்டார்கள். ஆனால் முதலில் தீயொழுக்கத்தில் நடந்துவிட்டால், மீண்டும் நல்லொழுக்கத் தைக் கடைப்பிடிக்க முயன்றாலும் கெட்டபெயர் கெட்ட பெயர்தானே? அதனால்தான் ஒதுதலைவிட ஒழுக்கத்தில் விழிப்பு மிகவேண்டும் என்றார் ஆசிரியர். இன்னும் இதனை மற்றொன்றாலும் அறியலாம். அது வருமாறு: திருவள்ளுவர் கல்வி' என்னும் பகுதியில்,

“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு”
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”

எனக் கல்வியைக் கண்ணினும் சிறந்ததாகக் கூறியுள்ளார். இவ்வதிகாரத்து முதற்குறளில், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்று கூறியுள்ளார். எனவே, கண்னைவிடத் கல்வியையும் உயிரையும் விட ஒழுக்கத்தையும் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாயிற்று. ஆயின், கண் இன்றி வாழமுடியும்-உயிரின்றி வாழமுடியுமா? அது போலவே, கல்வியின்றி வாழ்ந்தாலும் ஒழுக்கமின்றி வாழக்கூடாது-எனவே ஒத்தினும் (ஓதுதலினும்) ஒழுக்கமே மேலானது என்பது தெளிவு. இக்கருத்தைத்தான் ஆசிரியர் இக்குறளில் குறிப்பாகக் (தொகுத்து) கூறியுள்ளார். நிற்க—

ஒழுக்கம் குறித்தே சாதிப் பிரிவினை ஏற்பட்டது என்னும் கருத்துடையோர், தம் கொள்கைக்கு ஆதாரமாக இக்குறளை எடுத்துக் காட்டலாம். அஃதாவது பார்ப்பான்