பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii தேன்.அங்ங்ன மெனில், தமிழனாகிய யான் தமிழ்த்தொகை நூல்களைப் பற்றி ஆய்ந்து நூல் வெளியிட எடுத்துக் கொண் டுள்ள முயற்சி மிகவும் இன்றியமையாதது என உணர்ந்து எனது பணியைத் தொடரலானேன். உள்ள நிலைமையை உரைக் கின்றேன்: எந்த ஆய்வு மன்றச் சார்பும்-எந்தப் பல்கலைக் கழகச் சார்பும் இல்லாத-தனியொருவனாகிய அடியேனது இந்த முயற்சிக்குத் தமிழ் மக்களிடையே எந்த அளவு ஆதரவு இருக்கும் என அறியேன். நன்றி: யான் சென்று குறிப்பு எடுக்க ஒப்புதல் அளித்த நூலகங் களின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்து கிறேன். சில நூலகங்களில் உள்ள சில நூல்களில் பல ஏடுகள் சிதைந்து போனமையால், அந்நூல்களைப் பற்றிய முழு விவரங் களும் தரப்படாமல், நூல்பெயர்கள் மட்டும் அல்லது மிகவும் சிறிய அளவுக் குறிப்புகள் மட்டும் இந்நூலில் தரப்பட்டிருக்கும். குறிப்பு விவரம்: சில நூல்களின் பெயர்கட்கு முன் இடப்பட்டுள்ள எண்கள் தமிழக அரசின் கீழைக்கலை ஓலைச் சுவடி நூலகத்தில் (M.G.O.M.L.) சுவடிகட்கு இடப்பட்டுள்ள எண்ண்ரிக்கைகளா கும். சில ஒல்ைச் சுவடிகளும் காகிதப் படிகளும் கிடைத்த விவரமும் நூலின் உள்ளுறை பற்றிய விவரங்களுடன் தரப்பெற் றிருக்கும். யான் 1971 ஆம் ஆண்டு பல ஊர்களிலும் எடுத்த குறிப்பு களைக் கொண்டுமட்டும் இந்நூலை எழுதியுள்ளேன். அதன்பின் வெளிவந்த தொகை நூல்கள் பற்றிய விவரங்களைத் தரமுடிய வில்லை. அவற்றை முயன்று தேடப் போதிய உடல் நலம் இல்லை. மூளைக் கட்டிப் பிணி தொடர்பால் தலை-சுற்றல் மயக்கம் - தலைவலி ஆகியவற்றிற்கிடையே என்ன செய்ய முடியும்? - அடுத்த பதிப்புக்கு வாய்ப்பு இருப்பின், இயன்றால், 1971 ஆம் ஆண்டிற்குப் பின்பு வெளியான தொகை நூல்களையும்