பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுகிற உத்திகளையும் கற்பித்து வழிகாட்டுதல் பெற்றோர்களது. உற்றோர்களும் தங்கள் தேக நலத்தைக் காத்துக்கொள்வதுடன் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் காக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ளச் ச்ெய்தல் தான், இக்கல்வியின் முக்கிய நோக்கமாகும். 5. சமுதாய மக்களுக்கு நோய்களின் கொடுமை பற்றியும் அவற்றைத் தவிர்த்து வாழும் திறமை பற்றியும் கூறி உதவி செய்தல். 14. சோடா போன்ற பானங்களால் ஏற்படும் தீமைகள் யாவை? * வாயு கலந்த குடிக்கும் பானங்கள் எல்லாவற்றிலும் உடலுக்கு சக்தி தரும் எதுவும் இல்லை. அதில் இனிப்பு இருக்கிறது என்பதைத் தவிர இதுபோன்ற சுன்வபானங்கள் சிறுவர் சிறுமிகள் அதிகமாக இருந்துவதால் பற்கள் நலிவடைந்து சொத்தையாகிப் போகின்றன. அத்துடன், இந்த பானங்கள் அஜீரணசக்தியை மட்டுப் படுத்தி, அஜீரணத்தை ஏற்படுத்துவதுடன், குடற்புன் போன்ற வியாதிகளையும் கூட்டி வந்து விடுகிறது. - 15. சாலை விதிகள் பற்றி எழுதுக: a. - 1. சாலையில் நடக்கும்போது, இடது புறமாகத்தான் செல்ல வேண்டும். 2. சாலையில் செல்லும்போது வழிகாட்டும் காவலரின் சைகையைப் பார்த்து, அதன் படி தான் செல்ல வேண்டும் உங்கள் இஷ்டம் போல் போகக் கூடாது. 3. நடு ரோட்டில் நடப்பதும் கூடி கும்மாளம் போட்டுக் கொண்டு கும்பலாக போவதும், விளாயாடுவதும் ஆபத்தை விளைவிக்கும். 4. ரோட்டைக் கடக்கும் போது பதட்டத்துடன் ஒட்க் கூடாது. வண்டி வரும் போக்கைப் பார்த்து நடந்கு செல்வது நல்லது. 5. ஒடுகின்ற வாகனங்களைத் தொடக் கூடாது. 6. சாலை எனக்குத்தான் சொந்தம், என்னை யார் கேட்பது என்ற அசட்டு கர்வத்தில் சாலையில் நடந்தால்,நிச்சயம் நீங்கள் விபத்துக்குள்ளாவீர்கள். இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். . 16. சுகாதார வாழ்க்கையின் ககத்திற்கான வழிமுறைகள் யாவை? உடலை கெடுக்கும் காரியங்கள்தான் ಗ್ಜೀತ್ಗ என்பதாகும். பழக்கம் என்பது ஒரு காரியத்தைத் தொடர்ந்து விரும்பி செய்வதாகும். உடலுக்கு அழகையும், சக்தியையும், சுகத்தையும் கொடுப்பது நல்ல பழக்கமாகும். உடலை சிறிது சிறிதாக நலிவுபடுத்தி சித்ரவதை செய்வது தான் கெட்டப்பழக்கமாகும். 轟 வரிசையில் நிற்கும் பழக்கம். குப்பைகளை தொட்டியில் டோடும் பழக்கம், கண்ட இடங்களில் துப்பாத பழக்கம் நிமிர்ந்து நிற்கும் தோரணைபழக்கம், மற்றும் மரியாதையாக நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் நல்ல பழக்கங்களாகும். - 76