பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை .309 215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. பொருள் விளக்கம்: ஊருணி ஊரெல்லாம் உண்ணும் நீர்நிலையாகிய குளம் நீர் நிறைந்தது அற்றே - நீர் நிரம்பிப் பெருகியிருப்பது போல, உலகு அவாம்= சிறந்த மக்களும் விரும்பிப் போற்றுகிற பேரறிவாளன் = உலக ஞானம் மிகுந்தவனின் திரு எழிலான உடலும் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது சொல் விளக்கம்: திரு அழகு, எழில், செல்வம், வாழ்க்கை தெய்வத்தன்மை ஊருணி = ஊரெல்லாம் உண்ணும் குளம் முற்கால உரை: Sp . ᎶᎡ) ᏧᏠᏏ நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினையுடையவனது செல்வம், ஊரில் வாழ்வார் தண்ணிருண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். தற்கால உரை: உலக நடையை விரும் பிச் செய்யும் பெரிய அறிவினை ஆள்கின்றவன் செல்வத்தை அடைதல், ஊருணி நீர் நிறைந்தது போலும். (வ.உ.சி) புதிய உரை: உலக ஞானம் மிகுந்தவனின் (வலியதேகம், இனிமையான மனம்கொண்ட) தெய்வாம் சமான வாழ்க்கையானது, ஊரெல்லாம் உண்ணும் குளத்து. நீர்போல் உதவுகிறது. விளக்கம்: பிறருக்கு உதவ விரும்புகிறவருக்கு நிறைய செல்வம் மட்டும் இருந்தால் போதாது. நீட்டிய கரங்களுக்கும், கேட்கிற குரலுக்கும், இரங்குகின்ற இதமான மனம் வேண்டும். பதமான குணம் வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறவர்களாகவே உலா வருவார்கள். உடலழகும், மன அழகும் தான் ஒருவரது வாழ்க்கையின் பூரணமாகப் பிரகாசிப்பதால்தான், வள்ளுவரும் திரு என்றார். அதையும் பேரறிவாளன் திரு என்றார். பேரறிவு + ஆளன் என்பவன், பெரும் ஞானம் உடையவன். உலக ஞானத்தில்