1. வாழ்வியல் நெறிகள்
‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பார் அறிவிற் சிறந்த ஒளவைப் பிராட்டியார். பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மக்கள் மண்ணில் கல்ல வண்ணம் வாழ்வதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். எப்படி யாவது வாழலாம்’ என்பதை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும்” என்று மனத்தில் உறுதி மேற் கொண்டு செயலில் அதனை கடாத்திக் காட்டுதல் வேண்டும். குறிக்கோளிலாது கெட்டேன்’ என்பார் திருநாவுக்கரசர் பெருமான். எண்பத்தோராண்டுகள் உயரிய குறிக்கோளுடன் தொண்டு வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்த அப்பர் பெருமானே தம் வாழ்க்கை குறித்து இவ்வாறு சொல்லிக் கொள்வாரே யானால் காமெல்லாம் எவ்வாறு வாழ்க்கையை வகுத் தமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தாமே போதரும்.
கில்லாமை கிலைபெற்றிருக்கின்ற இவ்வுலகில் நிலைபெற வாழ வேண்டும் என்று எண்ணியவர்கள் தம் புகழ் கிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள்.