பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 81 விளக்கம்: ஒழுக்க நெறிகளுடன் வீட்டில் வாழ்க்கை நடத்துபவன், சிறப்புற வாழ்ந்து காட்டுவதால், தகுதி, பதவி, செல்வத்தால் சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விட, பெருமை மிகுந்த தலைமை இடத்தை வகிக்கிறான். தகுதி ஒன்றால் மட்டுமே தலைமைப் பேறு பெறுகிறான். 48. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து பொருள் விளக்கம்: ஆற்றின் = மற்ற மக்களின் மனங்குளிர துயர்துடைத்து ஒழுக்கி = எந்த நேரத்தும் அந்த நெறியினின்றும் தவறாது அறன் இழுக்கா = நலப் பணிகளிலிருந்து வழுவாமல் இல்வாழ்க்கை = வாழ்கிற, வீட்டில் வாழ்பவர் வாழ்க்கையானது நோற்பாரின் = உலக மக்களிலிருந்து விலகி துறவுப் பணியாற்றுகிற நீத்தார் பெறுகிற நோன்மை = (செயல்) வலிமையை உடைத்து = தோற்கடித்து விடுகிற ஆற்றல் பெற்றதாகும். (அல்லது) நோற் பார் பெறுகிற வலிமையைவிட பலமடங்கு உண்டாக்கித் தருகிற ஆற்றல் பெற்றதாகும். சொல் விளக்கம்: உடைத்து = தோற்கடித்து முற்கால உரை: தவத்தோரை தவவழியில் நடத்தி, தானும் இல்லறத்தினின்று தவறாத வாழ்க்கை தவம் செய்வோர் நிலையினும் பெருமை உடையது என்பதாம். தற்கால உரை: பிறரை நல்வழியில் நடக்கச் செய்து, தானும் நல்வழியில் தவறாமல் நடப்பவன் இல் வாழ்க்கை, கடுந்தவம் செய்பவர் தவத்தினும் வலிமை உடையதாகும். புதிய உரை: மற்றவர் மனங்குளிர துயர்துடைத்து அறநெறிதவறாது, நலப்பணி செய்து வாழ்கிறவன் வாழ்க்கை நீத்தார் வலிமையையும் தோற்கடிப்பதாம்.