பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உயிர்க்காற்று உடம்பில் நிறைய இருக்கும்போது, உடலுக்கு உயிர்ப்பு சக்தி அதிகமாகும். அப்போது அவன் செம்மாந்த நடை நடப்பான். சிலிர்ப்புடன் நிமிர்ந்து நிற்பான். நலிவும் அழிவும் தரும் நோய்கள் அணுகாத, நிறை வாழ்வு வாழ்வான். அதைத்தான் வள்ளுவரும் உயிர் வாழ்வான் என்று கூறுகிறார். உயிர்ப்பு சக்தி எங்கே உருவாகிறது? இயற்கையோடு இயைந்து வாழ்கிறபோதுதான், உடலிலே நீர், வெப்பம், காற்று முக்கிய பங்கு வகிப்பது போல, உலகிலே நீர், வெப்பம், காற்று மூன்றும்தான் ஆண்டு அரசாள்கின்றன. இயற்கையை, மனித உடலில் உள்ள ஐம்புலன்களும்தாம் உணர்ந்து தெரிவிக்கின்றன. இயற்கையை உணர்கின்றதற்கு உணர்வு என்று பெயர். அதை ஆங்கிலத்தில் Sense என்பார்கள். பார்த்தல், கேட்டல், ருசித்தல், சுவாசித்தல், உணர்தல் எனும் ஐந்து உணர்வுகளும் சரிவர செயல்படுகிறபோதுதான், அதை முற்றுணர்வு என்கின்றனர். அதைத்தான் ஆங்கிலத்தில் Common Sense grairl imişoir. ஐம் புலன்கள் உணர்கின்ற உணர்வுகளே, உடலால் அறியப்பட்டு, மூளையில் பதிகிறபோது, அறிவாகமாறுகிறது. ஆக, அறிவுக்கு உணர்வுகளே. ஊற்றுக் கண்ணாக அமைகின்றன. தன் தேகத்திற்கு எது ஒத்துக் கொள்கிறது? எதை ஏற்கமறுக்கிறது என்பதைத் தெரிந்து தெளிந்து கொள்கிற ஒருவன்தான் தேகநலம் பெற்று, வளம், பலம் பெற்று வாழ்கிறான் அப்படி அவன் புத்துணர்ச்சியோடு வாழ்வதைத் தான் உயிர்ப்பு சக்தி என்கிறோம். அப்படி இயற்கை நிலையை அறியாமல் தனது விருப்பப்படி வாழ்கிறவன், ஏற்றுக் கொள்ளாத உடல் நோய் வாய்ப்பட்டுப்போக, அதனால் நொந்து நலிந்து, நைந்து சத்திழந்து செத்தவனாகி விடுகிறான். உயிர்ப்பற்ற நிலையையே பிணம் என்கிறோம். ஆகவே அவன் நடைப்பிணம் என நடமாடுகிறான். அவனது வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை என்பதால்தான், அவனைச் செத்தாருள் ஒருவனாக வைக்கப்படுகிறான். ஆகவே, இயற்கையோடு ஒத்த வாழ்வு வாழ்கிறவனே, ஒப்புரவு குணம் மேலோங்க, உடலாலும் மனத்தாலும், ஆத்மாவாலும் உயர்ந்த வாழ்வு வாழ்கிறான் என்று தனது 4 வது குறளில் வள்ளுவர் கூறுகின்றார்.