பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 தமிழ்நூல் தொகுப்புக் கலை 31. முனைய தரையன் 42. ஒரு புலவன் 32. கோடைச் சிவந்தான் 43. பிராமணப் பிள்ளையன் புலவன் 44. அம்மைச்சி 33. உத்தரநல்லூர் நங்கை 45. காளமேகப் புலவர் 34. திருவாரூர் நாகரச நம்பி 46. குமார சரசுவதி 35. புங்கனூர்க் கிழவன் 47. தத்துவப் பிரகாசர் 36. குடிதாங்கி 48. கவிராசப் பிள்ளை 37. கச்சிராயன் 49. பரமேசுரப் புலவர் 38. கண்டியதேவன் 50. உண்ணாமுலை எல்லப்ப 39. விண்ணன் 40. வாயற் பதி வடுகன் 41. கச்சியப்பன் நயினார் 51. அந்தகக்கவி வீரராகவ முதலியார் ஆகியோர் சங்க காலந் தொட்டுப் பிற்காலம் வரை வாழ்ந்த புலவர் கள் சிலரின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற் றுள்ளன. சங்கத்தார், பாண்டியன், பாண்டியன் தேவி, சோழன் புலவன், பாண்டியன் புலவன், ஒரு தாதி, சோழனும் தேவியும் ஒரு புலவன் - முதலிய பெயர்கள் சில, எண்ணத்திற்கு - சிந்த னைக்கு வேலை கொடுக்கின்றன. இந்நூலைத் தொகுத்தவர் தமக்குக் கிடைத்த பாடல்களை யெல்லாம் மனம் போன போக்கில் தொகுத்துள்ளது போல் தோன்றுகிறது. மற்று மொரு பதிப்பு இப்பதிப்புகளே யன்றி, தி.த. கனகசுந்தரம் பிள்ளையும் ஒரு பதிப்பு வெளியிட்டுள்ளார். புதிய புலவர் சிலரின் பெயர் களையும் புதிய பாடல்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்திய தொகுப்பாசிரியர்க்கு நன்றி செலுத்த வேண்டும். w புலவர் புராணம் ஆசிரியர்: திருப் புகழ்ச் சுவாமிகள் என்றும் முருகதாச சுவாமிகள் என்றும் வழங்கப்பெறும் தண்டபாணி சுவாமிகள் வெளியீடு: தி.மு. செந்தில்நாயகம் பிள்ளை. சென்னை கேசரி அச்சுக் கூடம். 3 ஆம் பதிப்பு - பிரசோற்பத்தி - இடபரவி1931. மொத்தப் பாடல்கள் - 3003. குல -மத வேறுபாடின்றிப், புலவர்களின் வரலாறுகள் தரப்பெற்றுள்ளன. அகத்திய மகா