சுந்தர சண்முகனார்
103
அடுத்து, ஐந்திலக்கணங்களையும் அமைத்தோ அல்லது அவற்றுள் ஒன்றிரண்டைமட்டும் அமைத்தோ இயற்றப்பெற்ற நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் பொதுவாகக் காண்பாம்:
இறையனார் இயற்றிய இறையனார் அகப்பொருள் அல்லது இறையனர் களவியல் என்னும் இரு பெயர்களை யுடைய நூலும், நாற்கவிராச நம்பியின் நம்பி அகப் பொருளும், ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா மாலையும், பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலமும், அமித சாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல்களும், தண்டி ஆசிரியரின் தண்டி அலங்காரமும், திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாறனலங்காரமும், விசாகப் பெருமாள் ஐயரின் ஐந்திலக்கண நூலும் அணியிலக்கண நூலும், புத்தமித்திரரின் வீரசோழியமும், வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கமும், சிவஞான முனிவரின் இலக்கண விளக்கச் சூறாவளியும், முத்துவீரநாவலரின் முத்து வீரியமும், வீரமாமுனிவரின் தொன்னுரல் விளக்கமும், வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணம் - செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் - செந்தமிழ் இலக்கணத் திறவுகோல் என்னும் நூல்களும், குணவீர பண்டிதரின் சின்னூல் என்னும் நேமிநாதமும், ஈசான தேசிகரின் இலக்கணக் கொத்தும், சுப்பிரமணிய தீட்சதரின் பிரயோக விவேகமும், பாம்பன் சுவாமிகளின் பல் சந்தப் பரிமளம் - வண்ண இயல் என்னும் நூல்களும், குமரகுருபரரின் சிதம்பர செய்யுட்கோவையும், பொய்கையார் - பரணர் முதலிய பன்னிருவர் எழுதிய பன்னிரு பாட்டியலும், மாமூலரின் மாமூலர் பாட்டியலும், நேமிநாதரின் வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும், நவநீத நடர் என்னும் அரிபத்தரின் நவநீதப் பாட்டியலும், பரஞ்சோதியாரின்