பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 201 ஐந்நூறு பாடல்களுக்கு மிகாமலும் கொண்டிருக்கும் - என்பது இதன் கருந்து. வரிசை முறை: மேலே காட்டப்பட்டுள்ள, நற்றிணை நல்ல குறுந்தொகை என்று தொடங்கும் பாடலில், நற்றிணை முதலாகப்புறநானூறு ஈறாக எட்டு நூல்களும் வரிசைப்படுத்தப் பட்டிருப்பினும் இந்த வரிசையமைப்பை ஏற்றுக்கொள்வதற்கில்லை. சீர் - தளை, எதுகை - மோனை பொருந்தப்பாடல் அமைக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, இந்த வரிசை முறை பின்பற்றப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. உண்மையான பழைய வரிசை முறை இறையனார் அகப்பொருள் உரையில் காணக்கிடக் கின்றது. அது வருமாறு:- - “...கடைச்சங்கமிருந்து தமிழாய்ந்தார்.மதுரை மருதனிள "நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார்...அவர்களாற் பாடப்பட்டா நெடுந்தொகை நானுாறும், குறுந்தொகை நானுறும், நற்றிணை நானுாறும் புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன,” இந்த உரைப்பகுதியில், அகநானூறு என்னும் வேறொரு பெயரும் கொண்ட நெடுந்தொகை முதலாக, எட்டு நூல் களும் வரிசைப்படுத்தப் பட்டிருப்பது காண்க. இந்த வரிசைமுறை ஆராய்ச்சியாளரின் அறிவுப்பசிக்கு அரிய விருந்தாகும். பிற்கால நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்ப்ருங்கலக் காரிகை, வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலிய நூல்களில், பாக்கள் வெண்பா, அகவல் பா (ஆசிரியப் பா), கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகையனவாக இந்த வரிசையில் கூறப்பட்டுள்ளன. ஆனால், பழம்பெருநூலாகிய தொல்காப்பியம், வேறு மாதிரியாகக் கூறுகிறது. தொல் காப்பிய முறை வருமாறு: பாக்களின் வகையைத் தொகுத்துச் சொல்லின், ஆசிரியப்பா, வெண்பா என இரண்டு வகையாகும்; விரித்துச் சொல்லின்